சுடச் சுடச் செய்திகள்

மகாதீரே பிரதமராக நீடிக்க 138 உறுப்பினர்கள் ஆதரவு என தகவல்

புத்ரஜெயா: மலேசியாவில் டாக்டர் மகாதீர் முகம்மது, முழு பதவிக் காலத்திற்கும் பிரதமராக சேவையாற்ற வேண்டும் என்று 138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டு இருப்பதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இருந்தாலும் அப்படிக் கேட்டுக்கொள்ளும் பிரமாணப் பத்திரங் களை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் இன்னமும் நிராகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாதீருக்கு ஆதரவாக கையெழுத்திட்டு உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையைவிட அதிகமாக இருக்கிறது. 112 பேர் கையெழுத்திட்டால் பிரதமருக்குப் பெரும்பான்மை கிடைத்துவிடும். இன்னும் 10 பேர் மகாதீருக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை அவர் பெற்றுவிடுவார் என்று ஒரு தகவல் வட்டாரம் குறிப்பிட்டது. 

மலேசியாவில் 2018 மே மாதம் 14வது பொதுத் தேர்தல் நடந்தது. அதில் மகாதீர் கட்சியும் பிகேஆர் உள்ளிட்ட இதர  கட்சிகளும் கூட்டாகப் போட்டியிட்டன. அப்போது ஓர் இணக்கம் ஏற்பட்டது. அதன்படி பிரதமராக பதவி ஏற்கும் டாக்டர் மகாதீர், பாதியிலேயே விலகிக்கொண்டு பிரதமர் பதவியை பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் இப்போது டாக்டர் மகாதீரே முழுப் பதவி காலத்திற்கும்   பிரதமராக நீடிக்க வேண்டும் என்று பிரமாணப் பத்திரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுவது அந்த இணக்கத்திற்கு முரணானது என்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அத்தகைய பத்திரங்களில் கையெழுத்திட்டு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 18 பேர். அன்வாரின் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் 26 பேர். அம்னோ உறுப்பினர்கள் 39 பேரில் 13 பேர் மகாதீருக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டு உள்ளனர். மற்ற 26 உறுப்பினர்களும் டாக்டர் மகாதீர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

டாக்டர் மகாதீருக்கு நெருக்கமானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி அவர்களிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள் என்றும் ஆனால் இதில் டாக்டர் மகாதீருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வேறு ஒரு தரப்பு குறிப்பிட்டது. 

இதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறிய பிரதமர், 138 பேரின் கையெழுத்தை வாங்கி

யது வியப்பாக இருக்கிறது என்றார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon