முகக்கவசங்களுக்கு மலேசியாவிலும் தேவை அதிகரிப்பு

உள்ளூர் மக்களுக்கு போதிய அளவில் முகக்கவசங்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

இருப்பினும், மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக முகக்கவசங்கள் விநியோகம் கிடைக்கவில்லை என்று மருந்தாளர்கள் கூறியுள்ளனர்.

உள்ளூர் முகக்கவச தயாரிப்பாளர்கள் நாள் ஒன்றுக்கு 400,000 முகக்கவசங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மலேசிய உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைஃபுதின் நசுசோன் இஸ்மாயில் இம்மாதம் 7ஆம் தேதி கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக முகக்கவசங்கள் விற்கப்படுகின்றன. சாதாரண முகக்கவசங்கள் தலா 80 மலேசிய காசுக்கும் N95 முகக்கவசங்கள் தலா 6 ரிங்கிட்டுக்கும் விற்கப்படுகின்றன.

“சமூக மருத்துக் கடைகளில் குறிப்பாக சாபா, சரவாக், கிராமப்புறக் கடைகளில் மக்கள் அதிகமான அளவில் முகக்கவசங்கள் வாங்கிக் குவிப்பதால் அங்கு அவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முகக்கவசங்களுக்கு அதிக விலை கிடைப்பதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் முகக்கவசங்களை அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவே விரும்புகின்றன.

“உள்ளூர் உற்பத்தியாளர்கள் மலேசிய மக்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து முகக்கவசங்களைச் சேமித்து வைப்பதற்கு அரசாங்கம் அவர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்று மலேசிய மருந்தியல் சங்கத்தின் தலைவர் அம்ராஹி புவாங் தெரிவித்தார்.

#மலேசியா #முகக்கவசம் #தட்டுப்பாடு #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!