மலேசியாவில் 153 சம்பவங்கள்; 4 பேர் மரணம்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் புதி­தாக 153 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது நேற்று உறு­தி­செய்­யப்­பட்­டது. அவர்­க­ளை­யும் சேர்த்து, கிருமி தொற்­றி­யுள்­ளோ­ரின் எண்­ணிக்கை 1,183ஆக உயர்ந்­துள்­ளது. தென்­கிழக்­கா­சி­யா­வில் ஆக அதி­க­மா­னோர் கிரு­மித்­தொற்று கண்­டி­ருப்­பது மலே­சி­யா­வில்­தான்.

அந்­நாட்­டில் கொரோ­னா­ கிருமியால் நேற்று மட்டும் நான்­கு பேர் உயி­ரி­ழந்­தார். அவர்களையும் சேர்த்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக கூடியுள்ளது. கோலா­லம்­பூர் அருகே நடை­பெற்ற சமய ஒன்­று­கூ­டல் நிகழ்­வில் கலந்து­கொண்ட 50 வயது மலே­சி­யர் அவர்களில் ஒருவர் என்று அந்­நாட்டு சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் இது­வரை 24 சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிருமி தொற்­றி­யுள்­ள­தா­க­வும் கூறிய அவர், அவர்­களில் 19 பேர் தமது அமைச்­சைச் சேர்ந்­த­வர்­கள் என்­றார்.

இந்­தோ­னீ­சி­யா­வில் அறுவர் பலி

இந்­நி­லை­யில், இந்­தோ­னீ­சி­யா­வில் கொரோனா பாதிப்­பால் மேலும் அறு­வர் உயிரிழந்­துள்­ள­னர். அவர்­களை­யும் சேர்த்து, உயி­ரி­ழந்­தவர்­களின் எண்­ணிக்கை 38ஆக உயர்ந்­துள்­ளது. இந்­தோ­னீ­சி­யா­வில் புதி­தாக 81 பேரை கொரோனா கிருமி தொற்­றி­யுள்­ளது. அவர்­க­ளை­யும் சேர்த்து, கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 450ஆக உயர்ந்­துள்­ளது.

ஜோகூர் படகு முனையத்தில் குவிந்த இந்தோனீசியர்கள்

பொது­மக்­கள் நட­மாட்ட கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மலே­சியா பிறப்­பித்­தது முதல், அந்த நாட்­டில் உள்ள இந்­தோ­னீ­சி­யர்­கள் தாய­கம் திரும்ப பர­ப­ரப்பு காட்டி வரு­கி­றார்­கள்.

ஜோகூர் மாநி­லத்­தில் பொந்­தி­யா­னில் இருக்­கும் குக்­குப் அனைத்­து­ல­கப் படகு முனை­யத்­தில் ஏரா­ள­மான இந்­தோ­னீ­சி­யர்­கள் திரண்டு வரு­கி­றார்­கள்.

மலே­சி­யா­வில் பொது­மக்­கள் நட­மாட்­டக் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்ட முதல் நாளன்றே ஏரா­ள­மான இந்­தோ­னீ­சி­யர்­கள் படகு முனை­யத்­தில் திரண்­ட­தாக பொந்­தி­யான் போலிஸ் தலை­வர் முஸ்­தபா பக்ரி சாலே தெரி­வித்­தார்.

ஜோகூர் தொழிற்­சா­லை­களில் வேலை பார்ப்­போர் உட்­பட ஏரா­ள­மான ஊழி­யர்­கள் அவர்­களில் அடங்­கு­வர்.

பொது­மக்­கள் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு காலத்­தின்­போது ஊழி­யர்­க­ளுக்கு விடு­முறை கொடுக்­கப்­பட்டு இருக்­கிறது. அந்த விடு­மு­றை­யைக் குடும்­பத்­து­டன் கழிக்க இந்­தோ­னீ­சி­யர்­கள் விரும்­பு­கி­றார்­கள் என்று அந்த அதி­காரி தெரி­வித்­தார்.

கொவிட்-19 தலை­காட்­டத் தொடங்­கி­யது முதலே ஜோகூர் மற்­றும் இந்­தோ­னீ­சி­யா­வின் சுகா­தா­ரத் துறை­கள் உடல் வெப்­ப­நி­லைப் பரி­சோ­தனை உட்­பட பல முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களைச் சோத­னைச் சாவ­டி­களில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன என்று பொந்­தி­யான் போலிஸ் தலை­வர் நேற்று குறிப்­பிட்­டார்.

தேவைக்­கேற்ப குக்­குப் படகு முனை­யத்­தில் இருந்து இந்­தோ­னீ­சி­யா­வில் உள்ள தஞ்­சுங் பாலாய் துறை­மு­கத்­திற்கு அதி­கப் பட­குச் சேவை­கள் இடம்­பெ­றும் என்­றும் அவர் கூறி­னார்.

இத­னி­டையே, படகு முனை­யத்­தில் காணப்­படும் கூட்­டத்­தைக் காட்­டும் படங்­களை ஃபேஸ்புக் பக்­கத்­தில் தஞ்சோங் பியாய் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வீ ஜெக் செங் பதி­வேற்றியிருந்­தார்.

படகு முனை­யத்­தில் பெரும் கூட்­டம் திரள்­வ­தால் மேலும் பல­ரைக் கிருமி தொற்­றி­வி­ட­லாம் என்று அந்த வட்­டார கிராம மக்­கள் பயப்­படு­வ­தால் இதன் தொடர்­பில் ஜோகூர் முதல்­வர், பொந்­தி­யான் மாவட்ட அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்­பு­கொண்டு உடனே நட­வ­டிக்கை எடுக்­கும்­படி தான் தெரி­வித்து இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!