மலேசியா: படிப்படியாக பரவிய கொரோனா கிருமி

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் தலை­ந­க­ரான கோலா­லம்­பூ­ரில் பள்ளிவா­சல் ஒன்­றில் சென்ற மாதம் நடை­பெற்ற சமய ஒன்­று­கூ­டல் நிகழ்­வில் கலந்­து­கொண்­டோர் சிலர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதற்­கி­டையே இவர்­கள் மூலம் படிப்­ப­டி­யாக மேலும் பலர் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளதை மலே­சிய சுகா­தார அமைச்சு கண்­ட­றிந்­துள்­ளது.

“பள்­ளி­வா­சல் கிரு­மித்­தொற்று குழு­மத்­தில் இது­வரை 711 பேர் பாதிக்­கப்ட்­டுள்­ள­னர். இவர்­கள் தங்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­ களுக்­குக் கிரு­மித்­தொற்­றைப் பரப்­பி­னர். இதை முத­லாம் கிரு­மித்­தொற்று தலை­முறை என்று குறிப்­பி­டு­வோம்,” என விளக்­கி­னார் சுகா­தார தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா.

குடும்ப உறுப்­பி­னர்­கள் தங்­ களின் அண்­டை­வீட்­டா­ருக்­கும் பின்­னர் அந்த அண்­டை­வீட்­டார் தங்­க­ளின் நண்­பர்­க­ளுக்­கும் படிப்­ ப­டி­யாக கிரு­மி­யைப் பரப்­பி­ய­தாக அவர் சுட்­டி­னார்.

இவ்­வாறு ஐந்து வழி­களில் படிப்­ப­டி­யாக கிரு­மித்­தொற்று பல­ருக்­குப் பர­வி­யுள்­ள­தாக அவர் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற கொவிட்-19 செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பகிர்ந்­து­கொண்­டார்.

தற்­போது மலே­சி­யா­வில் ஏற்­பட்டுள்ள 2,161 கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் இப்­பள்­ளி­வா­சல் கிரு­மித்­தொற்று குழு­மம் 55 விழுக்­கா­டாக உள்­ளது.

அத்­து­டன் கிரு­மித்­தொற்று மர­ணங்­களும் பாதிக்கு மேல் இக்­ கு­ழு­மத்­து­டன் தொடர்­பு­டை­யவை.

“முத­லில் நிகழ்­வில் கலந்­து­கொண்­டோ­ரின் நெருங்­கிய தொடர்­பு­களை நாங்­கள் அடை­யா­ளம் கண்டு உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

“அவர்­க­ளின் குடும்ப உறுப்­ பினர்­களும் பின்­னர் அவர்­க­ளது நண்­பர்­களும் இந்­தத் தொடர்­பு­களில் அடங்­கு­வர். இவர்­க­ளைக் கண்­ட­றி­வது மிகச் சிக்­க­லா­னது. அதி­க காலம் எடுக்­கும்,” என்­றார் டாக்­டர் ஹிஷாம்.

ஒன்­று­கூ­டல் நிகழ்­வில் கலந்­து­கொண்ட 13,762 பேர் கிரு­மித்­தொற்று தொடர்­பில் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதில் 1,117 பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ள­தா­க­வும் கூறப்­படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!