கொரோனாவுக்குப் புதிய மருந்து: சோதனைக்கு மலேசியா தேர்வு

கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கும் நோக்­கில் புதி­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள ‘ரெம்­டெ­சி­விர்’ என்ற மருந்­தின் செயல்­தி­ற­னைச் சோதித்­துப் பார்க்க உல­கச் சுகா­தார நிறு­வ­னம் முடி­வு­செய்­துள்­ளது. அந்­தப் பரி­சோ­தனை முயற்­சி­கள் இடம்­பெ­றும் நாடு­களில் ஒன்­றாக மலே­சியா தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் தேசிய பாது­காப்பு மன்­றம் தெரி­வித்­து இருக்கிறது.

மலே­சிய சுகா­தார அமைச்சு அந்த ஆய்வை மேற்­கொள்­ளும் திறன்­பெற்­றி­ருப்­ப­தால் அந்­நாடு தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக மன்­றம் குறிப்­பிட்­டது.

‘ரெம்­டெ­சி­விர்’ மருந்தை கொரோனா கிருமி தொற்­றி­யுள்­ளோ­ருக்­குக் கொடுத்து, அதன் செயல்­தி­ற­னை­யும் அத­னால் ஏற்­படும் பக்­க­வி­ளை­வு­க­ளை­யும் சுகா­தார அமைச்சு கண்­கா­ணிக்­கும் என்று சுகா­தா­ரத் தலை­மைச் செய­லா­ளர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­யி­ருக்­கி­றார்.

புதிய கொரோனா கிரு­மித்­தொற்றை எந்த மருந்­தே­னும் குணப்­ப­டுத்­துமா என்­ப­தைக் கண்­ட­றி­வ­தற்­காக ‘ஒற்­று­மைச் சோதனை’ என அழைக்­கப்­படும் பேர­ள­வி­லான சோதனை முயற்­சியை உல­கச் சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்­துள்­ள­தா­கத் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் டாக்­டர் நூர் பதி­விட்­டுள்­ளார்.

பல நாடு­க­ளைச் சேர்ந்த, பல ­ஆயி­ரக்­க­ணக்­கான நோயா­ளி­களுக்கு அம்மருந்­தைக் கொடுத்து, சோதித்துப் பார்க்கப்படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தி­யா­வும் இணையலாம்

இத­னி­டையே, கொரோனா தொற்­றுக்­கான மருந்­தைக் கண்­டு­பி­டிக்­கும் ஆய்­வு­க­ளைத் துரி­தப்­ப­டுத்­த­வுள்ள இந்த ‘ஒற்­று­மைச் சோதனை’ முயற்­சி­யில் இந்­தி­யா­ இணை­ய­க் கூடும் ­என்று இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றத்­தின் நோய்த்­தொற்­றி­யல் பிரி­வுத் தலை­வர் டாக்­டர் ஆர்.கங்­கா­ கேத்­கர் கூறி­யுள்­ளார்.

இந்த ‘ஒற்­று­மைச் சோதனை’ மூலம் நம்­பிக்கை அளிக்­கக்­கூ­டிய நான்கு முக்­கிய மருந்­து­களில் உலக சுகா­தார நிறு­வ­னம் கவ­னம் செலுத்­த­வுள்­ளது.

புதி­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்­தான ‘ரெம்­டெ­சி­விர்’, மலே­ரி­யா­வைக் குணப்­ப­டுத்த வழங்­கப்­படும் குளோ­ரோ­கு­வின் மற்­றும் ஹைட்­ராக்­சி­குளோ­ரோ­கு­வின், எச்­ஐவி தொற்­றுக்­குத் தரப்­படும் லோபினவிர் மற்­றும் ரிட்­டோ­ன­விர் மருந்­து­க­ளின் கலவை, எச்­ஐவி மருந்­து­க­ளு­டன் இன்­டர்­ஃபெ­ரோன் பீட்டா சேர்ந்த கலவை ஆகிய நான்கு வெவ்வேறு மருந்துகளை அல்லது மருந்துக் கலவைகளை கொரோனா கிருமி தொற்றியோருக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்க்கப்படவுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!