மலேசியாவில் மேலும் 150 பேருக்குப் பாதிப்பு; மரண எண்ணிக்கை 34ஆக அதிகரிப்பு

பெட்­டா­லிங் ஜெயா: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மலே­சி­யா­வில் மேலும் ஏழு பேர் மாண்­டுள்­ள­னர்.

மேலும் 150 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

நேற்று நண்­ப­கல் 12 மணி நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மொத்­தம் 34 உயி­ரி­ழப்­பு­கள் நிகழ்ந்­துள்­ளன.

மொத்­தம் 2,470 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

68 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­தா­க­வும் மலே­சிய சுகா­தா­ரத்­துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று தெரி­வித்­தார்.

73 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக அவர் கூறி­னார்.

அவர்­களில் 52 பேருக்கு செயற்கை சுவாச இயந்­தி­ரத்­தின் உதவி தேவைப்­ப­டு­வ­தாக டாக்­டர் நூர் ஹிஷாம் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கும் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறி வெளியே சென்ற குற்­றத்­துக்­காக பினாங்­கின் மத்­திய செப­ராங் பிராய் மாவட்­டத்­தில் 69 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் அனை­வ­ரும் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், ஜோகூர் மாநி­லத்­தில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வுக்­குக் கட்­டுப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறைந்­தி­ருப்­ப­தாக அம்­மா­நி­லத்­தின் சுகா­தார, சுற்­றுப்­பு­றக் குழு­வின் தலை­வர் திரு ஆர்.வித்­யா­னந்­தன் கவலை தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!