நிதிச்சுமை: சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் கவலை

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் மலே சியர்களுக்கு வீட்டுக்கவலை ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமை பற்றியும் கவலை தெரிவித்துள்ளனர்.

மலேசிய அரசாங்கம் அந்நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மார்ச் மாதம் 18ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31ஆம் தேதி முடிப்பதாக இருந்தது. பின்னர் அது இம்மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஒருவேளை, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்பட்டால் பணத் தேவைக்கு என்ன செய்வது என்பதே மலேசியர்களின் பெருங்கவலையாக உள்ளது.

தங்கள் முதலாளிகள் தாங்கள் தங்க இடவசதி செய்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மலேசியர்கள், கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டால் செலவு இன்னும் அதிகமாகும் என்றும் கூறினர்.

உதவி ரசாயன நிபுணரான 25 வயது எடி மனோவா, மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைக்கு வந்ததிலிருந்து தமது நிறுவனம் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்த வாடகை அறையில் தங்கியுள்ளார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டால் தங்கும் அறைக்கான வாடகையை நானே செலுத்த வேண்டியிருக்கும். எனது நிறுவனம் வாடகைக் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் நான் என் சொந்த பணத்தைச் செலுத்தி சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்துள்ளேன். காரணம், சம்பளமில்லா விடுப்பை எடுக்க என்னால் இயலாது,” என்றார்.

துணைப் போலிஸ் படை அதிகாரியாக பணியாற்றும் திரு வோங், “தற்போது சிங்கப்பூரில் தங்க என் முதலாளி ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், எதிர்காலத்தில், ஊழியர்கள் தங்குவதற்கு எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் ஐந்து குறைந்த கட்டண ஹோட்டல்களில் தங்க ஒரு நாளைக்கு $15 வரை நாங்கள் வாடகை செலுத்த வேண்டியிருக்கும் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது,” என்றார்.

“அப்படி என்றால் இரண்டு வாரங்களுக்கு நாங்கள் $210 செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கூடுதல் செலவை ஈடுகட்டுவது சிரமாக இருக்கும்,” என்றும் திரு வோங் தமது கவலையைத் தெரிவித்தார்.

#சிங்கப்பூர் #மலேசியர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!