மலேசியர்கள் மேலும் பலர் தாயகம் திரும்ப ஆயத்தம்

ஜோகூர் பாரு: சிங்­கப்­பூ­ரில் தங்கி இருக்­கும் மலே­சி­யர்­களில் மேலும் பலர் தாய­கம் திரும்­பு­வார்­கள் என்று மலே­சி­யா­வின் ஜோகூர் மாநில குடி­நு­ழை­வுத்­துறை எதிர்­பார்க்­கிறது.

கொரோனா கிரு­மித் தொற்­றைத் துடைத்து ஒழிப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் எடுத்­து­வ­ரும் மிகக்­க­டு­மை­யான நட­வ­டிக்­கை­களே இதற்­குக் காரண மெனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜோகூர் பாரு­வில் உள்ள சுல்­தான் இஸ்­கந்­தர் குடி­நு­ழைவு மற்­றும் தனிமை வளா­கம் வழி­யா­க­வும் இரண்­டா­வது பாலத்­தில் இருக்­கும் காம்ப்­ளக்ஸ் சுல்­தான் அபு பக்­கர் வழி­யா­க­வும் அதி­கம் பேர் வரு­வார்­கள் என்று எதிர்­பார்த்து அதற்­குத் தாங்­கள் ஆயத்­த­மாக இருப்­ப­தாக ஜோகூ­ரின் குடி­நு­ழை­வுத்­துறை இயக்­கு­நர் பகா­ரு­தீன் தாஹிர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை வந்­த­வர்­களை­விட ஏப்­ரல் 1 முதல் 14 வரை தாய­கம் திரும்­பும் மலே­சி­யர்­கள் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் என்று ஜோகூர் குடி­நு­ழை­வுத் துறை எதிர்­பார்ப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் மலே­சி­யர்­கள் எதிர்­நோக்­கும் பல கட்­டுப்­பா­டு­களே இதற்­குக் கார­ணம் என்று ஜோகூர் பாரு­வில் அவர் சனிக்­கி­ழமை கூறி­னார்.

சிங்­கப்­பூர் பல நட­வ­டிக்­கை­களை அறி­வித்து இருப்­பதை அடுத்து அங்­குள்ள மலே­சி­யர்­கள் நாடு திரும்ப மலே­சிய அர­சாங்­கம் அனு­ம­திக்­க­வேண்­டும் என்று ஜோகூர் பாரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அக்­மால் நாசிர் வெள்­ளிக்­கி­ழமை கோரிக்கை விடுத்து இருந்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து தாய­கம் திரும்­பும் மலே­சி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இல்லை எனில் அவர்­கள் 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­படமாட்­டார்­கள் என்று மலே­சிய அரசு தெரி­வித்­துள்­ள­தாக மலே­சி­ய­கினி சனிக்­கி­ழமை குறிப்­பிட்டு இருந்­தது.

இத­னி­டையே, ஜோகூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்று பெரு­கி­னால் அதைச் சமா­ளிக்க ஏது­வாக மாநி­லம் முழு­வ­தும் 54 தனிமை இடங்­கள் தயா­ராக இருப்­ப­தாக அந்த மாநில அர­சாங்­கம் அர­சி­த­ழில் குறிப்­பிட்­டுள்­ளது.

அவற்­றில் 14 இடங்­கள் ஏற்­கெ­னவே செயல்­பட தொடங்­கி­விட்­ட­தாக ஜோகூர் மாநி­லத்­தின் சுகா­தார, சுற்­றுப்­பு­றக் குழு­வின் தலை­வர் ஆர் வித்­யா­னந்­தன் குறிப்­பிட்­டார்.

தேவை எனில் இதர இடங்­களை அர­சாங்­கம் அடை­யா­ளம் காணும் என்­றும் அந்த இடங்­க­ளைத் தனிமை நிலை­யங்­க­ளாகப் பயன்­படுத்­திக்­கொள்ள முடி­யும் என்­றும் அவர் மேலும் கூறி­னார்.

பொருத்­த­மான ஹோட்­டல்­கள், தனி­யார் கட்­ட­டங்­கள், ஆகி­யவை அவற்­றில் அடங்­கும் என்­றும் வித்­யா­னந்­தன் தெரி­வித்­தார்.

இவ்­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் மலே­சி­யர்­கள் தன்­னைத் தொடர்பு கொண்டு பல­வற்­றை­யும் பற்றி விசா­ரித்து வரு­வ­தா­க­வும் ஊர் திரும்­பு­வோ­ருக்கு கிரு­மித்தொற்று இல்லை என்­ப­தைத் தெரி­விக்­கும் பத்­தி­ரங்­கள் தேவை என்று மலே­சிய குடி­நு­ழை­வுத்­துறை கட்­டா­ய­மா­கக் கேட்­ப­தால் தாங்­கள் தாய­கம் திரும்ப முடி­ய­வில்லை என்று அவர்­கள் புகார் தெரி­விப்­ப­தா­க­வும் ஸ்து­லாங் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆண்ட்ரு சென் குறிப்­பிட்­டார்.

இதன் தொடர்­பில் உத­வும்­படி சிங்­கப்­பூ­ரின் சுகா­தார அமைச்­சர், மனிதவள அமைச்­ச­ரு­டன் தான் தொடர்பு கொண்டு கேட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!