மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க ஆதரவு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் அறி­விக்­கப்­பட்ட 28 நாள் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை வரும் செவ்­வாய்க்­கி­ழமை (ஏப்­ரல் 14) முடி­வுக்கு வர­வி­ருக்­கும் நிலை­யில் அதனை மேலும் நீட்­டிக்­கப் பல­ரும் விரும்­பு­வ­தா­கத் தெரிய வந்து உள்­ளது.

இது­தொ­டர்­பாக மலே­சி­யா­வின் தேசிய பாது­காப்பு மன்­றம் இணை­யம் மூலம் கருத்­தாய்வு ஒன்றை நடத்­தி­யது.

நேற்று (வியா­ழக்­கி­ழமை) பிற்­ப­கல் நில­வ­ரப்­படி அந்த ஆய்­வில் 386,000 பேர் பங்­கேற்­ற­னர்.

மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்த வண்­ணம் இருப்­ப­தால் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை மேலும் சில காலத்­துக்கு நீட்­டிக்க வேண்­டும் என ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட 88 விழுக்­காட்­டி­னர் கூறி உள்­ள­னர்.

இதற்­கி­டையே, ஆணையை வரும் 14ஆம் தேதிக்­குப் பின்­ன­ரும் நீட்­டிக்க மலே­சி­யா­வின் மருத்­து­வக் கல்­விக்­க­ழ­க­மும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

“ஆணை­யின் விதி­மு­றை­களை அள­வுக்­கு­மீறி தளர்த்­து­வ­தா­லும் முழு­மை­யான பய­னைப் பெறு­முன்­னரே ஆணை­யைத் திரும்­பப் பெறு­வ­தா­லும் கடந்த நான்கு வாரங்­க­ளாக சாதித்­தவை வீணா­கி­வி­ட­லாம்.

“கொவிட்-19க்கு எதி­ரான போரில் நாம் மிக­வும் பின்­தங்கி இருக்­கி­றோம். இது­வரை சாதித்­த­தோடு இவ்­வாண்­டில் நாம் இன்­னும் பல தியா­கங்­க­ளைச் செய்ய வேண்டி உள்­ளது.

“மலே­சி­யர்­கள் ஒற்­று­மை­யாக கட்­டுப்­பா­டு­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­தன் மூலம் இந்­தப் போரை முடி­வுக்­க­ரு­கில் கொண்டு வர இய­லும் என்­பதை நாம் உல­கிற்கு உணர்த்­து­வோம்,” என்று கல்­விக்­க­ழ­கம் நேற்று விடுத்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மேலும் மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான, அவ­சி­ய­மற்ற பய­ணங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடையை நோன்­புப் பெரு­நா­ளுக்­குப் பின்­ன­ரும் நீட்­டிக்­கு­மா­றும் அது யோசனை கூறி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!