மலேசியாவில் ஏப்ரல் 28 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு, அதாவது இம்மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்று பரவலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் நிலையில் இன்று (ஏப்ரல் 10) தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நாட்டு மக்களுடன் உரையாடிய அந்த நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் இந்தத் தகவலைத் தெரிவித்தார்

கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மலேசியாவில் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை பிறப்பிக்கப்பட்ட முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, பின்னர் ஏப்ரல் 14ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து ஆணையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கவிருப்பதால் மக்கள் இம்மாதம் 28ஆம் தேதிவரை ஆணைக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று திரு முகைதீன் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி நீட்டிப்பு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதால் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களால் கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது.

“ஆனால் இந்த நிலைமையை மேலும் சில காலம் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். கிருமித்தொற்று பரவல் 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்ய இன்னும் சில மாதங்கள் ஆகலாம்,” என்றார் அவர்.

ஆணை பிறப்பிக்கப்பட்டு 24ஆவது நாளான நேற்று திரு முகைதீன் இவ்வாறு கூறினார்.

மலேசியர்களில் பெரும்பாலானோர் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோர், உணவுப்பொருட்கள், மருந்துகள் வாம்க்ல வெளியில் செல்வோர் மட்டுமே வெளியில் நடமாடினர்.

மக்கள் பெருமளவில் கூடும் சமயம், விளையாட்டு, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகள் அனைத்தும் மார்ச் 18ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தகங்கள் போன்றவையும் மூடப்பட்டுள்ளன.

போக்குவரத்து, வங்கி, சுகாதாரப் பராமரிப்பு, பாதுகாவல் தொடர்பான முக்கிய சேவைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள், நடமாட்டக் கட்டுப்பாடுகளை உடனே ரத்து செய்துவிட வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருப்பதையும் பிரதமர் சுட்டினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மார்ச் 22ஆம் தேதி முதல் ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, 97 விழுக்காட்டினர் ஆணைக்கு உட்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

“கொவிட்-19க்கு எதிரான நம் போர் இன்னும் முடியவில்லை என்பதை உங்களுக்கு நினைவுறுத்திக் கொள்கிறேன். போர் இன்னும் தொடர்கிறது. இதுவரை நாம் தேறி வருகிறோம். அதனால் உங்கள் மனதைத் திடமாக்கிக் கொண்டு தொடர்ந்து போரிடுங்கள். நம் விடாமுயற்சியால் நிச்சயம் வெல்வோம்,” என்றார் பிரதமர் முகைதீன்.

இந்நிலையில், இன்று மலேசியாவில் புதிதாக 118 பேருக்கு கிருமித்தொற்று சம்பவங்களும் 3 கிருமித்தொற்று தொடர்பான மரணங்களும் பதிவாகின. அங்கு மொத்தம் 4,346 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மரண எண்ணிக்கை 70 ஆகியுள்ளது.

குணமடைந்து இன்று வீடு திரும்பிய 222 பேரையும் சேர்த்து அங்கு இதுவரை 1,830 பேர் குணமடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!