சிங்கப்பூரில் இருந்து செல்லும் மலேசியர்கள் அளவு கூடவில்லை

பெட்­டா­லிங் ஜெயா: சிங்­கப்­பூர் அர­சாங்­கம் கொரோனா கிரு­மித்­தொற்று அதி­க­ரிப்பு கார­ண­மாக ஜூன் 1 வரை கட்டுப்பாட்டு நட வடிக்கைகளை நீட்­டித்துள்ளது.

என்­றா­லும் சிங்­கப்­பூ­ரிலிருந்து தாய­கம் திரும்­பும் மலே­சிய ஊழி­யர்­கள் அதிக அள­வில் இல்லை என்று மலே­சி­யா­வின் தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் தொழிற்­சா­லை­கள் இன்­ன­மும் செயல்­ப­டு­கின்­றன. மூடப்­பட்டு இருக்­கின்ற தொழிற்­சா­லை­க­ளைப் பொறுத்தவரை­ அவற்­றில் வேலை செய்­யும் மலே­சி­யர்­கள் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் தங்கி இருக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் அரசு அனு­ம­தித்து இருக்­கிறது என்று அமைச்­சர் விளக்கம் அளித்தார்.

சிங்­கப்­பூ­ரில் சம்­ப­ளம் இல்­லா­மல் விடுப்பு அளிக்­கப்­பட்டு உள்ள மலே­சிய ஊழி­யர்­கள் தாய­கம் திரும்ப அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­களா என்­பதை சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளு­டன் பேசி தெரிந்­து­கொள்­ளும்­படி மலே­சி­யா­வின் மனி­த­வள அமைச்­சுக்கு அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ள­தா­க­வும் அமைச்­சர் இஸ்­மா­யில் சாப்ரி குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து ஒரே நேரமாக இல்­லா­மல் கட்­டம் கட்­ட­மாக மலே­சி­யர்­கள் நாடு திரும்­ப­லாம் என்று இரண்டு அர­சாங்­கங்­களும் ஒப்­புக்­கொண்டு இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, நாட்டில் புதி­தாக 50 பேரை கொரோனா கிருமி தொற்­றி­யது என்று மலே­சிய அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

அவர்­க­ளை­யும் சேர்த்து மலே­சி­யா­வில் 5,532 பேர் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். புதி­தாக ஒரு­வர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் பலி­யா­ன­வர்­கள் எண்­ணிக்கை 93 என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இவ்­வே­ளை­யில், மலே­சி­யா­வில் ஈப்போ, ஜாலான் துன் அப்­துல் ரசாக்­கில் செயல்­படும் உண­வ­கம் ஒன்­றில் மது­வு­டன் விருந்­துண்­ட­தாக நம்­பப்­படும் பத்து இந்­திய ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­டு உள்­ள­னர்.

அவர்­க­ளுக்கு வயது 19 முதல் 44 வரை என்று ஈப்போ மாவட்ட போலிஸ் தலை­வர் அஸ்­மாடி அப்­துல் அஜீஸ் தெரி­வித்­தார்.

கைதானவர்கள் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறி­ய­தாக ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து அந்த உணவு நிலை­யத்­தின் உரி­மம் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தா­க­வும் அந்த அதி­காரி கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!