மலேசியாவில் சில கட்டுப்பாடுகளுக்குத் தளர்வு

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வின் நான்­காம் கட்­டம் நேற்று தொடங்­கிய நிலை­யில், அங்கு சில கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

இதற்கு முன்பு அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு ஒரு குடும்­பத்­தி­லி­ருந்து ஒரு­வர் மட்­டுமே வெளியே செல்­ல­மு­டி­யும் என்ற கட்­டுப்­பாடு தளர்த்­தப்­பட்டு, ஒரு குடும்­பத்­தி­லி­ருந்து இரு­வர் செல்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் ஒரே வீட்­டில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளா­க­ இருக்க வேண்­டி­யது அவ­சி­யம்.

அதே போல் வீட்­டில் இருந்து 10 கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு மட்­டும் தான் செல்­ல­வேண்­டும் என்ற கட்­டுப்­பா­டும் தளர்த்­தப்­பட்டு

உள்­ள­தாகத் தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் முழு­வீச்­சில் தொடங்­கிய 2 அல்­லது 4 வாரங்­க­ளுக்­குப் பிறகு பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­ப­டு­வ­தற்குப் பரிந்­து­ரைக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு கூறி­யுள்­ளது. பல தொழில் நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தால், பாலர் பரா­ம­ரிப்பு மையங்­கள் திறக்­கப்­ப­டு­வ­தற்­கான பாது­காப்பு விதி­மு­றை­கள் குறித்து இன்று பரி­சீலிக்கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

மலே­சி­யா­வில் நேற்று மேலும் 94 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் 72 பேர் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து திரும்­பி­ய­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!