மலேசியாவில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க கோரி 210,000 பேர் இணையத்தில் மனு

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது என்று அரசாங்கத்தை வலியுறுத்தும் இணைய மனுவில் சுமார் 210,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தனது மே தின உரையில் பொருளியல் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்தார்.

ஆனால் இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், மற்ற நாடுகளைப் போல் மலேசியாவிலும் மீண்டும் கிருமித்தொற்று தலையெடுக்கக்கூடும் என்று இணைய மனுவில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் மார்ச் 18ஆம் தேதி முதல் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ளது.

இதற்கிடையே, கடந்த இரண்டு வாரங்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 100ஐ கடந்தது.

இன்று கிருமித்தொற்று கண்டறியப்பட்ட 105 பேரில் 11 பேர் மட்டுமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங்கில் உள்ள கட்டுமானத் தலம் ஒன்றில் 27 பேருக்கு கிருமித்தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மலேசியாவில் கிருமித்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,176 ஆகியுள்ளது.

இதுவரை 4,326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக கொவிட்-19 தொடர்பிலான மரணங்கள் பதிவாகாத நிலையில் அங்கு கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 103ஆக உள்ளது.

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக மலேசியாவில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் எனப்படும் முறையான ஆவணமற்ற வெளிநாட்டினரைச் சுற்றி வளைக்கும் முயற்சியில் மலேசிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக மலேசியாவின் தலைமை போலிஸ் அதிகாரி இன்று சொன்னார்.

“ஏனெனில் அவர்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களை விட்டு வெளியேறினால் அவர்களைக் கண்டுபிடிப்பது எங்களுக்குக் கடினமாக இருக்கும்,” என்றார் தலைமை போலிஸ் அதிகாரி அப்துல் ஹமீது பதோர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!