மலேசியாவில் 2வது நாளாக அதிகரித்த கிருமித்தொற்று

கோலாலம்பூர்: மலே­சி­யா­வில் புதி­தாக 122 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக நேற்று அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு அறி­வித்­தது. ஒரே நாளில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை நேற்று இரண்­டா­வது நாளாக மூன்று இலக்­கத்­தில் தொடர்ந்­தது. நேற்று முன்­தி­னம் அந்த எண்­ணிக்கை இரு வாரங்­க­ளுக்­குப் பிறகு நூறைக் கடந்­தது. சனிக்­கி­ழமை பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 105.

புதிய 122 சம்­ப­வங்­களில் 52 சம்­ப­வங்­கள் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை என்­றும் எஞ்­சி­யவை உள்­நாட்­டில் பர­வி­யவை என்­றும் சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­தார். மலே­சி­யா­வில் இது­வரை 6,298 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ள­தா­க­வும் இவர்­களில் 1,780 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து 105 ஆகி­யுள்­ளது. ஏற்­கெ­னவே 103 பேர் உயிரிழந்த நிலை­யில் மேலும் இரு­வர் கொவிட்-19 கிரு­மிக்­குப் பலி­யா­கி­விட்­ட­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

நோய் பாதிப்­பி­லி­ருந்து 87 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­விட்­ட­தா­க­வும் இவர்­க­ளை­யும் சேர்த்து இது­வரை 4,413 பேர் குண­ம­டைந்து உள்­ள­தா­க­வும் இது பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்­கை­யில் 70 விழுக்­காடு என்­றும் டாக்­டர் நூர் ஹிஷாம் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!