கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஏழு மாநிலங்கள் தயக்கம்

பெட்­டா­லிங் ஜெயா: நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வின் சில அம்­சங்­க­ளைத் தளர்த்த கூட்­ட­ர­சாங்­கம் அறி­வித்த முடிவை மலே­சி­யா­வின் ஏழு மாநி­லங்­கள் ஏற்­க­வில்லை. கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வா­மல் தடுக்க கட்­டுப்­பா­டு­கள் நீடிப்­பது அவ­சி­யம் என்று அவை கரு­து­கின்­றன.

கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டன. அதற்­கி­ணங்க இன்று திங்­கட்­கி­ழமை முதல் வர்த்­தக நிறு­வ­னங்­கள் மீண்­டும் திறக்க அனு­ம­திக்­கப்­படும். மக்­கள் வேலைக்­குச் செல்­ல­வும் உண­வ­கங்­களில் அமர்ந்து சாப்­பி­ட­வும் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். இருப்­பி­னும் அந்த சம­யங்­களில் அவர்­கள் சமூக இடை­வெ­ளியை அவ­சி­யம் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

ஆனால், கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­களை கெடா மாநி­லம் உட­ன­டி­யாக அமல்­ப­டுத்­தாது என்­றும் நாளை செவ்­வாய்க்­கி­ழமை மாநில நட­வ­டிக்­கைக் குழு நடத்­த­வி­ருக்­கும் சந்­திப்­புக் கூட்­டத்­தில் இது­கு­றித்த இறுதி முடிவு எடுக்­கப்­படும் என்­றும் அம்­மா­நில முத­ல­மைச்­சர் முக்­ரிஸ் மகா­தீர் அறி­வித்­தி­ருக்­கி­றார். கடந்த புதன்­கி­ழமை வரை­யில் எந்­த­வி­தப் புதிய கொவிட்-19 பாதிப்­பு­களும் அற்ற பச்சை நிற மண்­ட­ல­மாக கெடா அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

சிலாங்­கூர் மாநில முத­ல­மைச்­சர் அமி­ரு­தின் ஷாரி­யும் கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­களை அமல்­ப­டுத்­தப்போவதில்லை என்று அறி­வித்­துள்­ளார். எந்­தத் தொழில்­களை முத­லில் அனு­ம­திப்­பது என்­பது குறித்த முடி­வு­கள் எடுக்­கப்­படும் என்­றும் அதற்­கேற்ப உள்­ளூர் நிர்­வாக மன்­றங்­களும் தயா­ராக வேண்­டி­ய­தி­ருக்­கிறது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

நெகிரி செம்­பி­லான் மாநி­லம் உணவு, பானங்­களை கடை­யில் அமர்ந்து சாப்­பிட விதித்த தடை நீடிக்­கும் என்­றும் விளை­யாட்டு உள்­ளிட்ட சமூக நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்க அனு­ம­திக்­கப்­ப­டாது என்­றும் அறி­வித்­துள்­ளது. இதே­போல சாபா, சர­வாக், பினாங்கு, பாகாங் ஆகிய மாநி­லங் களும் புதிய தளர்­வு­களை அனு­ம­திக்­கா­மல் வெவ்­வேறு கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களில் தீவி­ரம் காட்டி வரு­கின்­றன.

இம்­மா­தம் 12ஆம் தேதி வரை நட­மாட்ட கட்­டுப்­பா­டு­களை விதித்த மலே­சிய அர­சாங்­கம் திடீ­ரென ஒரு வாரத்­திற்கு முன்­னரே அவற்­றைத் தளர்த்த முன்­வந்­தி­ருப்­ப­தற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்­ளது. கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நீடிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தும் மனு­வில் கிட்­டத்­தட்ட 400,000 பேர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில், இன்று முதல் காரில் பய­ணம் செய்­யும் நான்கு பேரும் ஒரே வீட்­டில் உள்­ள­வர்­க­க­ளாக இருப்­பது அவ­சி­யம் என்­றும் அவர்­கள் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் கூறி­யுள்­ளார்.

பொதுப் போக்­கு­வ­ரத்­தி­லும் சமூக இடை­வெளி உத்­த­ரவு பின்­பற்­றப்­ப­ட­வேண்­டும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. அதன்­படி, பேருந்து, ரயில்­களில் பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்டிருந்த அள­வில் பாதி மட்­டுமே பய­ணம் செய்ய முடி­யும்.

உதாரணமாக 40 பேர் பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்ட பேருந்­தில் இனி 20 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று திரு இஸ்­மா­யில் கூறி உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!