கட்டுப்பாடுகளை மீறிய அம்னோ தலைவரின் மகள், மருமகன் 

கோலா­லம்­பூர்: நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறி­ய­தாக முன்­னாள் மலேசிய துணைப் பிர­த­மர் ஸாஹிட் ஹமிடியின் மகள் மற்­றும் மரு­ம­கன் மீது குற்­றம் சாட்­டப்­பட உள்­ள­தாக மலே­சிய ஊட­கங்­கள் தெரி­வித்து உள்­ளன. திரு­வாட்டி நூருல் ஹிடாயா, திரு சைஃபுல் நிஸாம் ஆகிய இரு­வர் மீதும் தொற்­று­நோய் பர­வ­லைத் தடுப்­பது மற்­றம் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான சட்­டத்­தின்­கீழ் நாளை செவ்­வாய்க்­கி­ழமை குற்­றம் சாட்­டப்­படும் என தெரிகிறது. இது குறித்த முடிவை தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் எடுத்­துள்­ள­தா­க­வும் கோலா­லம்­பூர் நீதி­மன்­றத்­தில் அவ்­வி­ரு­வர் மீதும் குற்றம்

சாட்­டப்­படும் என்­றும் புக்­கிட் அம்­மான் குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு தலை­வர் ஹூசிர் முக­மது நேற்று கூறினார்.

இந்­தக் குற்­றத்­திற்­கான தண்­டனை ஆயி­ரம் ரிங்­கிட் அப­ரா­தம் அல்­லது ஆறு மாதச் சிறை. முன்­னாள் துணைப் பிர­த­ம­ரான திரு ஹமிடி, அம்­னோ­வின் தற்­போ­தைய தலை­வர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!