மலேசியாவில் 2வது நாளாக அதிகரித்த கிருமித்தொற்று

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக 122 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்தது. ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று இரண்டாவது நாளாக மூன்று இலக்கத்தில் தொடர்ந்தது. நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை இரு வாரங்களுக்குப் பிறகு நூறைக் கடந்தது. சனிக்கிழமை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105.

புதிய 122 சம்பவங்களில் 52 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புடையவை என்றும் எஞ்சியவை உள்நாட்டில் பரவியவை என்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மலேசியாவில் இதுவரை 6,298 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் இவர்களில் 1,780 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மரணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து 105 ஆகியுள்ளது. ஏற்கெனவே 103 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் கொவிட்-19 கிருமிக்குப் பலியாகிவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

நோய் பாதிப்பிலிருந்து 87 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் இவர்களையும் சேர்த்து இதுவரை 4,413 பேர் குணமடைந்து உள்ளதாகவும் இது பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 70 விழுக்காடு என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!