அம்னோ தலைவரின் மகளுக்கு தண்டனை குறைவு என சர்ச்சையைக் கிளப்பும் பெண்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசாங்கம் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிதியின் மகளுக்கும் மருமகனுக்கும் தலா 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது தற்போது சர்ச்சையாகி வருகிறது.

இதேபோன்று கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக சிறைத் தண்டனை பெற்ற பி. லிசா கிறிஸ்டினா என்னும் பெண்மணி இதுகுறித்து தமது ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒற்றை தாய்மாரான அந்தப் பெண் இந்தக் குற்றத்திற்காக எட்டு நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

“எனக்கு மட்டும் சிறை, அவர்களுக்கு சிறிய அபராதமா? ஏனிந்த இரட்டை நிலை? எனக்கு விளக்கம் வேண்டும்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குளிர்பானம் வாங்க தமது வீட்டிலிருந்து வெளியே சென்றபோது வழியில் மூன்று இந்தோனீசியர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அந்தப் பெண் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய குற்றத்திற்காக முதலில் லிசாவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எட்டு நாள் சிறையில் இருந்த பின்னர் அவரது தண்டனை 1,000 ரிங்கிட் அபராத மாக மாற்றப்பட்டது.

திரு ஹமிதியின் மகள் நூருல் ஹிடாயா, அவரது கணவர் சைஃபுல் நிஸாம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட அபராதம் தமக்கு விதிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவு என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சிறையிலிருந்த எட்டு நாட்களும் தமது மகனைச் சந்திக்க இயலாமல் தவித்ததாகவும் அபராதத்தைச் செலுத்த தமது தாயாரிடமிருந்து 1,000 ரிங்கிட் கடன் வாங்கியதாகவும் லிசா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் விளக்கிய மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப், “யாருக்கு, என்ன தண்டனை என்பதை நீதிமன்றமே முடிவு செய்கிறது. அரசாங்கம் அதில் தலையிடாது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!