மலேசிய மரண எண்ணிக்கை 107 ஆனது; புதிதாக 45 நோயாளிகள்

கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று புதிதாக 45 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,428 ஆனது. மேலும் நேற்று ஒருவர் உயிரிழந்தைத் தொடர்ந்து கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 107 ஆனது. கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மலேசியா செயல் படுத்தியது. அந்த உத்தரவு நடப்புக்கு வந்த 50வது நாள் நேற்று என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளியலை மீட்க வேண்டும்: வர்த்தக நிறுவனங்கள்

கோலாலம்பூர்: மலேசியாவில் 57 வர்த்தக அமைப்புகள் தேசிய அளவில் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்து உள்ளன. நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை சில நிபந்தனைகளுடன் தளர்த்த மலேசிய கூட்டரசாங்கம் பிறப்பித்த உத்தரவை ஏழு மாநிலங்கள் ஏற்க மறுத்து வருகின்றன. இந்த நிலையைச் சுட்டிக் காட்டிய வர்த்தக அமைப்புகள், கூட்டரசும் மாநிலங்களும் இணைந்து பொருளியலை மீட்க வேண்டும் என்று குரல் கொடுத்து உள்ளன. இதுதொடர்பான கருத்துகளை அனைத்துலக மலேசிய வர்த்தக தொழிற்சபையின் ஃபேஸ்புக்கில் அவை வெளியிட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!