மலேசியா: போர்க்கொடி தூக்கும் கூட்டணிக் கட்சிகள்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் பிர­த­மர் முகை­தீன் யாசின் பத­விக்கு வந்து இரண்டு மாதங்­களே ஆகி­யுள்­ளன.

ஆனால், அதற்­குள் அவ­ரு­டைய கூட்­ட­ணிக் கட்­சி­க­ளி­ட­மி­ருந்து அவ­ருக்கு நெருக்­கு­தல் தொடங்கி­விட்­டது.

பிர­த­ம­ரின் கூட்­ட­ணிக் கட்­சி­கள் தரும் நெருக்­க­டி­யால் அவ­ரு­டைய அதி­கா­ர­மும் தேய்ந்து வரு­வ­தாக செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.

இதற்கு உதா­ர­ண­மாக, அண்­மை­யில் முகை­தீன் யாசின் நாட்­டின் முடக்­க­நி­லையை தளர்த்­தும்படி போட்ட உத்­த­ரவை பல மாநிலங்­கள் கடைப்­பி­டிக்க மறுத்து வரு­வது சுட்­டி­காட்­டப்­ப­டு­கிறது.

இதில் அவ­ரது கட்­சி­யான பிரி­பூமி பெர்­சத்து கட்­சி­யும் கூட்­ட­ணி­யில் உள்ள மிகப் பெரிய கட்­சி­யான அம்­னோ­வும் ஜோகூர் மாநில பத­வி­கள் தொடர்­பாக மோதிக் கொண்­டுள்­ளன.

மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் பொிக்கத்­தான் நேஷ­னல் என்ற கூட்­டணி அர­சாங்­கத்­திற்­குத் தலைமை வகிக்­கி­றார்.

ஆனால், அவ­ரு­டைய பிரி­பூமி பெர்­சத்து கட்­சி­யின் தலை­வ­ராக முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது உள்­ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­வே­ளை­யில். கூட்­ட­ணியை அதி­கா­ர­பூர்வ ஒப்­பந்­தத்­தின் மூலம் உறுதி செய்ய அவர் எடுக்­கும் முயற்­சி­க­ளுக்கு அம்னோ தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து கடும் எதிர்ப்­பு கிளம்­பி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, முகை­தீன் யாசின் தலை­மையை முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­ம­து­வின் புதல்­வர் முக்­ரிஸ் முகம்­மது ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இல்லை.

அந்­தப் பத­விக்கு அவர் குறி­வைத்து முகை­தீன் யாசி­னுக்கு எதி­ராக செயல்­பட்டு வரு­கி­றார்.

“அதி­கா­ர­பூர்வ ஒப்­பந்­தம் தொடர்­பாக எவ்­வித முடி­வும் எட்டப்­ப­ட­வில்லை.

“சிலர் இதை இப்­ப­டியே அதி­கா­ர­பூர்­வ­மற்ற கூட்­ட­ணி­யாக வைத்­தி­ருக்க விரும்­பு­கின்­ற­னர்.

“வேறு சிலர் பெர்­சத்து கட்­சி­யின் தலை­மைப் போராட்­டம் எப்­படி முடி­யும் என்று தெரி­யா­த­தால் பொறுத்­தி­ருந்து பார்க்­க­லாம் என்று கூறு­கின்­ற­னர்,” என்று பெயர் குறிப்­பிட விரும்­பாத அம்னோ கட்­சி­யின் தலை­வர் ஒரு­வர் கூறு­வ­தாக செய்­தித் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பிர­த­மர் முகை­தீன் யாசி­னின் தலை­மைப் பத­விக்கு குறி­வைத்­துப் போட்­டி­யிட மகா­தீர் முகம்­ம­தின் புதல்­வர் காத்­தி­ருக்­கும் நிலை­யில் பெர்­சத்து கட்­சி­யின் தலை­மைத்­துவ தேர்­தல் கால­வ­ரை­யின்றி தள்­ளிப்­போ­டப்­பட்­டுள்­ளது.

இது­போன்ற எதிர்ப்­புக் குரல்­கள் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளி­டையே மோதல் போக்கை உரு­வாக்கி உள்ளது. இத­னால், குறு­கிய பெரும்­பான்­மை­யுை­டய தமது அர­சாங்­கத்­தைக் கட்­டிக்­காப்­ப­தில் பிர­த­மர் முகை­தீன் யாசின் நெருக்­கு­த­லுக்கு ஆளா­கி­யுள்­ள­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!