மலேசியாவில் புதிதாக 39 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று

புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று புதிதாக 39 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,467 ஆனது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாடு சென்று வந்தவர் என்றும் மற்ற அனைவரும் சமூகப்பரவலால் நோய்த்தொற்று கண்டவர்கள் என்று கூறப்படுகிறது. நேற்று மட்டும் 74 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையிலும் மொத்தம் 4,776 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவின் நலத்துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹி‌ஷாம் அப்துல்லா நேற்று செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். 1,584 பேர் மட்டுமே நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், 8 பேர் சுவாசக்கருவி துணையுடன் உள்ளனர். புதிதாக நோய்த்தொற்று மரணம் நிகழவில்லை. மலேசியாவில் இதுவரையிலும் 107 பேர் நோய்த்தொற்றுக்குப் பலியாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!