பிகேஆர் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேறுபாடுகளைக் களைவோம்

கோலாலம்பூர்: மலேசியாவின் இரு மூத்த அரசியல்வாதிகளான டாக்டர் மகாதீர் முகம்மது, திரு அன்வார் இப்ராகிம் இருவரும் தங்களுக்கு இடையே நிலவிய வேறுபாடுகளைக் களைந்து, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர தாங்கள் முற்படப்போவதாக சூளுரைத்து உள்ளனர்.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாத தேசியக் கூட்டணி ஆட்சியில் இருப்பதைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இருவரும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

அண்மைக்கால சம்பவங்களைத் தொடர்ந்து டாக்டர் மகாதீரும் திரு அன்வாரும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜனநாயக முறைப்படி தாங்கள் பெற்ற வெற்றி, அண்மையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் ஜனநாயக நடைமுறைகளுக்குப் புறம்பாகவும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் சாடினர்.

எனினும், மக்களுக்காக தங்களின் ஜனநாயகப் போராட்டம் இனியும் தொடரும் என்றும் அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியில் இருந்த 22 மாதக் காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் பலவும் செயலற்றுப்போய்விட்டதாக இருவரும் வருத்தம் தெரிவித்தனர்.

2018ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக் கூட்டணியை வீழ்த்தி பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்து சரியாக ஈராண்டுகளான நிலையில், டாக்டர் மகாதீரும் திரு அன்வாரும் நேற்று இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

“எங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை மக்களுக்காக ஒதுக்கி வைத்துள்ளோம். எங்களுக்கு வயதாகிவிட்டது. எனினும், போராடக்கூடிய எங்களது உணர்வு இளையர்களிடத்தில் உள்ளது.

“மீண்டும் எழுச்சி அடைந்து ஆட்சிக்கு வருவதற்கான நேரம் இது,” என்று 94 வயது டாக்டர் மகாதீரும் 72 வயது திரு அன்வாரும் கூறினர்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து டாக்டர் மகாதீர் விலகியது மலேசிய அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதையடுத்து, பொருளியல் விவகாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த திரு அஸ்மின் அலியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பிகேஆர் கட்சியில் இருந்து விலகி மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சியில் இணைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!