முகைதீனின் பிடியில் கெடா மாநிலம் வரக்கூடும்

பெட்டாலிங் ஜெயா: கடந்த வாரம் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தரப்பிலிருந்து ஏற்பட்ட விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரதமர் முகைதீன் யாசின் அதற்குப் பதிலடி தர உள்ளார்.

இன்னமும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிடியில் கெடா மாநிலம் உள்ளது. ஆனால், அடுத்த வார நடுப்பகுதிக்குள் அம்மாநில முதல் அமைச்சர் பதவியிலிருந்து முக்ரிஸ் மகாதீர் வெளியேறுவார் என்று அறியப்படுகிறது. முக்ரிஸ், டாக்டர் மகாதீரின் மகனாவார்.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், பாஸ் கட்சியின் ஜெனெரி சட்டமன்ற உறுப்பினர் முகம்மது சனுசி முகம்மது நூர் புதிய முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

கெடா மாநில புதிய அரசாங்கத்தில் பாஸ் கட்சியிலிருந்து 15 சட்டமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியிலிருந்து நால்வரும் அம்னோ மற்றும் பிகேஆர் கட்சிகளைச் சேர்ந்த தலா இரண்டு பேரும் அடங்குவர்.

மேற்கூறப்பட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்களுடன், 36 இருக்கைகள் கொண்ட மாநில சட்டமன்றத்தில் திரு முகைதீனின் தேசியக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கும்.

மாநிலத்தின் உயர்மட்ட பதவியில் இருந்து முக்ரிஸ் வெளியேற இருப்பது இது இரண்டாவது முறையாகும்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முன்னர், 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் மட்டும் முக்ரிஸ் முதல் அமைச்சராக இருந்தார்.

பாஸ் கட்சிக்கு மாநில அரசாங்கப் பொறுப்பை வழங்குவதன் மூலம், தேசியக் கூட்டணி பலம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சத்து கட்சித் தலைவரான திரு முகைதீன், டாக்டர் மகாதீருடன் மீண்டும் இணக்கம் காண நம்பிக்கையுடன் இருந்தார். நல்லெண்ண அடிப்படையில், கெடாவை முக்ரிசிடம் விட்டுவைக்க திரு முகைதீன் முடிவு செய்தார்.

ஆயினும், தமது பிரதமர் பதவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர டாக்டர் மகாதீர் முடிவெடுத்துள்ள நிலையில், அரசியல் சூழலில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இது யுத்த பிரகடனமாக மாறியதை அடுத்து, முக்ரிசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திரு முகைதீனுக்கு ஒரு காரணம் அமைந்துவிட்டது.

இவ்வாண்டு பிற்பகுதியில் பெர்சத்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு திரு முகைதீனை எதிர்த்துப் போட்டியிட திரு முக்ரிசுக்கு உள்ள வாய்ப்புகளைத் தற்போதைய அரசியல் சூழல் எந்த விதத்தில் பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!