கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பிடிபட்டனர்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள செலாயாங் காய்கறிகள் மொத்த விற்பனைச் சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலேசிய அதிகாரிகள் நேற்று நடத்திய திடீர் சோதனையில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பிடிபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.

பங்ளாதேஷ், இந்தியா, மியன்மார், நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகமாக இருக்கும் அந்தப் பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தினர்.

அப்பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர் ஒன்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.

அந்த மொத்த விற்பனைச் சந்தையில் அதிக எண்ணிக்கையில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டிருப்பதால், அது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ள இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் இடம் ஒன்றில் திடீர் சோதனை நடத்தப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை.

இம்மாதத் தொடக்கத்தில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதி அருகே திடீர் சோதனை நடத்தப்பட்டிருந்தது.

வெளிநாட்டு ஊழியர்களைக் கைது செய்வதால், மேலும் அதிகமானோர் அதிகாரிகளின் பார்வையிலிருந்து ஒளிந்துகொள்ளக்கூடும் என்று தொழிற்சங்க ஆர்வலர்கள் அக்கறை தெரிவித்திருந்தனர்.

அதிகாரிகளின் பிடியில் சிக்கி சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சாமல் கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களாக முன்வர ஊக்குவிக்கப்பட வேண்டும் என உள்ளூர் அதிகாரிகளிடம் தொழிற்சங்க ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

மாறாக, கூட்டம் நிறைந்த வீடமைப்புப் பகுதிகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமான சூழலில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளூர்வாசிகளுக்கு நிலவுகிறது.

இந்தச் சோதனை நடவடிக்கை குறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் மொத்த விற்பனைச் சந்தைக்கு வெளியே கூடினர்.

எனினும், அவர்கள் உள்ளே செல்வதற்கும் புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை என மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிறுவனம் அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது.

போலிசார் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்போடு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இந்தத் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக கோலாலம்பூர் போலிஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் கூறினார்.

நேற்று பிடிபட்ட வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தனர் என நம்பப்படுகிறது.

மலேசியாவின் ஆகப் பெரிய மொத்த விற்பனைச் சந்தையான செலாயாங்கில் காய்கறிகள் முதல் கடலுணவு வரை பலதரப்பட்ட உணவு வகைகள் விற்கப்பட்டு வந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!