மலேசிய பிரதமர் முகைதீன்: கொரோனா கிருமி போருக்கே முன்னுரிமை

கோலாலம்பூர்: முன்னர் திட்டமிட்டிருந்தபடி வரும் 18ஆம் தேதியன்று மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க நேரிடாது.

தற்போதைய சூழலில் கொரோனா கிருமி விவகாரத்திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நாயகர் நேற்று தெரிவித்தார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் திரு முகைதீன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான கோரிக்கையை மன்ற நாயகர் முகமது ஆரிஃப் முகமது யூசோஃப் அனுமதித்திருந்தார்.

இருப்பினும் கொவிட்-19 கொள்ளைநோய் இன்னும் முழுவதுமாக தீராத பட்சத்தில் கூட்டம் நடைபெறவுள்ள அந்த நாளன்று மாமன்னரின் உரை மட்டுமே இடம்பெறும் என்று திரு முகைதீன் தமக்கு தெரிவித்ததாக திரு ஆரிஃப் பின்னர் கூறினார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 27 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும். ஆனால் தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்புக்கான தேதி குறிப்பிடப்படவில்லை.

மலேசியாவில் இதுவரை 6,779 கிருமித்தொற்று சம்பவங்களும் 111 கிருமி தொடர்பான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

இதற்கிடையே பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து பெர்சத்து கட்சி வெளியேறுவது குறித்து டாக்டர் மகாதீர் முடிவெடுக்குமாறு திரு முகைதீன் பேசிய ஒரு நிமிட ஒலிப்பதிவு ஒன்று சமூக ஊடகங்களுக்குக் கசிந்துள்ளது. பதிவில் திரு முகைதீன் போன்ற குரல் ஒன்று பேசுவதாக அமைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!