பள்ளிவாசல்களில் நிபந்தனைகளுடன் கூட்டு தொழுகைக்கு அனுமதி

கோலாலம்பூர்: மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்களுக்கு உட்பட்ட பச்சை மண்டலப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுவதற்கான தடை இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

இம்மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படும் நோன்பு பெருநாளுக்கு முன்னதாகவே தடை தளர்த்தப்படுவதாக மலேசிய அரசாங்கம் நேற்று அறிவித்தது.

மலேசிய கூட்டரசுப் பிரதேசங்களில் ஒன்றான கோலாலம்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகபட்சம் 30 பேர் தொழுவதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமய விவகார அமைச்சர் ஸுல்கிஃப்லி முகம்மது அல் பக்ரி தெரிவித்தார்.

பள்ளிவாசல்களில் போலிஸ் மற்றும் மாநில சமய அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர் என்று அவர் சொன்னார்.

மலேசியாவின் எஞ்சிய 12 மாநிலங்களில் இந்த நடைமுறை பொருந்தாது. சமய விவகாரங்கள் தொடர்பில் அவற்றிடம் சொந்த விதிமுறைகள் இருப்பதே அதற்குக் காரணம்.

எனினும், அவை விரும்பினால் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றலாம் என திரு ஸுல்கிஃப்லி கூறினார்.

நாட்டில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன.

மலேசியாவில் நேற்று புதிதாக 40 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,819ஆக கூடியுள்ளது.

கிருமித்தொற்று பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112ஆக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!