சுடச் சுடச் செய்திகள்

'இந்தியாவிலிருந்து 100,000 டன் அரிசியை இறக்குமதி செய்யும் மலேசியா'

இந்தியாவிலிருந்து 100,000 டன் அரிசியை இந்த மாதமும் அடுத்த மாதமும் இறக்குமதி செய்ய மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளதாக ராய்ட்டர்சிடம் சில இந்திய அதிகாரிகள் சொன்னதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளாக மலேசியா, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் ஆண்டு சராசரி அளவைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் மகாதீரின் கருத்தைத் தொடர்ந்து, இரு நாடுகள் இடையே ஏற்பட்ட ராஜதந்திர உறவுகளின் விரிசலுக்குப் பிறகு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது. 

மலேசியாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யும் மியன்மார், வியட்னாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் கொரோனா தொற்று காரணமாக   தங்களுக்குத் தேவையான தானியத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும் நோக்கில், அரிசி ஏற்றுமதிக்குத் தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மலேசியாவின் கொள்முதல், அரிசி ஏற்றுமதியில் ஆகப்பெரிய நாடான இந்தியாவின் அரிசி கையிருப்புகளை ஒழுங்கமைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மலேசியா பெருமளவில் கொள்முதல் செய்கிறது,” என்று ராய்ட்டர்சிடம் சொன்னார் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ணா ராவ்.

இவ்வாண்டு இறுதியில் இந்த ஏற்றுமதி 200,000 டன்னாக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்  சொன்னார்.

ஆனால், மலேசிய விவசாய மற்றும் உணவுத் துறை அமைச்சு இதுபற்றிய கருத்துக்குப் பதில் அளிக்கவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon