கெடா புதிய முதல்வராக சனுசி முகம்மது நூர் இன்று பதவி ஏற்கக்கூடும்

கோலாலம்பூர்: புதிய முதலமைச்சரை வரவேற்க கெடா மாநிலம் தயாராகி வருகிறது. எதிர்த்தரப்பு தலைவரும் பாஸ் கட்சியின் ஜனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது சனுசி முகம்மது நூர் இன்று புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. புதிய அமைச்சரவையும் இன்றே பதவி ஏற்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகியதைத் தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் நிகழவிருக்கிறது. அதனால் டாக்டர் மகாதீர் முகம்மதுவின் மகனான முக்ரிஸ் மகாதீர், முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 36 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கெடா மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க 23 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை யாருக்கு உள்ளது என்பதை அறிய 36 உறுப்பினர்களையும் கெடா ஆட்சியாளரான சுல்தான் சலேஹுதீன் இப்னி அல்மார்ஹும் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் கருத்தைக் கேட்டறிந்தார். பிரதமர் முகைதீன் யாசினின் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிக்கும் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் காலையிலும் எதிரணியில் உள்ளவர்கள் மாலையிலும் சுல்தான் சலேஹுதீனைச் சந்தித்ததாக ஓர் உறுப்பினர் த ஸ்டார் இணையச் செய்தியிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நிகழவிருக்கும் முதலமைச்சர் பதவி ஏற்பு சடங்கிற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது. பதவி ஏற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் அரங்கிற்கு நேற்றுக் காலை 10.55 மணிக்கு சென்ற சுல்தான் சலேஹுதீன், அங்கு நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றதாகவும் த ஸ்டார் குறிப்பிட்டது.

இதற்கிடையே, திரு முக்ரிஸ், இன்று காலை 10 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக ஒரு தகவல் தெரிவித்தது. அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகுவது இது இரண்டாவது முறை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!