தனிமையில் மலேசிய பிரதமர்

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நேற்று முதல் 14 நாட்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.

அவர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்ததால் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

பிரதமர் முகைதீனுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது சோதனையில் தெரிந்தது.