மலேசியா: வெளிநாட்டு ஊழியர்களை மனிதாபிமானத்துடன் நடத்துகின்றோம்

புத்ரஜெயா: கொரோனா கிருமித்தொற்றுக்கு மத்தியில் மலேசியாவில் சட்டவிரோதக் குடியேறிகளைச் சுற்றி வளைக் கும் நடவடிக்கை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலை

யில், வெளிநாட்டு ஊழியர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப் படுகிறார்கள் என்று மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.

பாதுகாப்புத் துறை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகையில், “முறையான ஆவணங்கள் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாங்கம் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஊழி

யர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதாகவும் கூறினார்.