சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புகிறது மலேசியா

புத்­ர­ஜெயா: மலே­சி­யா­வில் இருக்­கும் சட்­ட­வி­ரோத குடி­யே­றி­கள் அடுத்த வாரம் முதல் தங்­க­ளது சொந்த நாடு­க­ளுக்­குத் திருப்பி அனுப்­பப்­ப­டு­வர் என்று கூறி­யுள்­ளார் மலே­சிய தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்.

வரும் 6ஆம் தேதி­யன்று தொடங்­கும் முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யில் இந்­தோ­னீ­சிய குடி­மக்­கள் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ள­னர்.

இது­பற்றி விளக்­கம் அளித்த இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், “அனைத்து இந்­தோ­னீ­சிய சட்­ட­வி­ரோத குடி­யே­றி­களும் தங்­க­ளது சொந்த நாடு திரும்­பு­வ­தற்கு முன்­னர், இந்­தோ­னீ­சிய தூத­ரக அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யில் அவர்­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­படும்.

“முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யில், தீப­கற்ப மலே­சியா மற்­றும் சர­வாக்­கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 2,189 பேரும் சாபா­வில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 672 பேரும் திருப்பி அனுப்­பப்­ப­டு­வர்.

“இவர்­களில் 450 பேர் விமா­னங்­கள் மூலம் ஜகார்த்தா, மேடான், சுர­பாயா ஆகிய நக­ரங்­க­ளுக்கு 6ஆம் தேதி­யன்று அனுப்பி வைக்­கப்­ப­டு­வர். அதன் பிறகு ஜூன் 10ஆம் தேதி­யன்று இதே இடங்­க­ளுக்கு மேலும் 445 பேர் அனுப்பி வைக்­கப்­ப­டு­வார்­கள்.

“ஜூன் 22ஆம் தேதி முதல் 1,294 இந்­தோ­னீ­சி­யர்­கள் கடல்­வ­ழி­யாக மேடா­னுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர். “இரண்­டாம் கட்ட நட­வ­டிக்­கை­யின் போது மேலும் 2,623 பேர் திருப்பி அனுப்­பப்­ப­டு­வர். இரண்­டாம் கட்ட நட­வ­டிக்கை இரண்டு மாத காலத்­திற்கு நீடிக்­கும்,” என்­றார்.

மேலும் நேப்­பா­ளத்­தைச் சேர்ந்த 246 பேரை­யும் மற்­றும் பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த 2,476 பேரை­யும் அவர்­க­ளது நாட்­டிற்கு அனுப்பி வைப்­பது குறித்து அந்­நாட்டு அதி­கா­ரி­க­ளோடு பேச்­சு­வார்த்தை நடத்தப்­பட்டு வரு­கிறது.

அது­போல் கம்­போ­டிய தூத­ர­க­மும் தங்­க­ளது நாட்­டைச் சேர்ந்த 67 பேரைத் திரும்ப அழைத்­துக் கொள்ள விருப்­பம் தெரி­வித்துள்­ள­தாக மலே­சியா கூறி­யுள்­ளது.

“தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சட்­ட­வி­ரோத குடி­யே­றி­களைத் திருப்பி அழைத்­துக்­கொள்ள மற்ற நாடு­களும் முன்­வந்து ஒத்­து­ழைக்­கும் என்று நாங்­கள் நம்­பு­கி­றோம்,” என்று இஸ்­மா­யில் சப்ரி கூறி­னார்.

கொரோனா தொற்று பர­வ­லுக்கு மத்­தி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கையை அடுத்து குடி­நு­ழைவு தடுப்பு மையத்­தில் 4,807 சட்­ட­வி­ரோத குடி­யே­றி­கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!