குளவிகளால் கொட்டப்பட்டு இறந்த எட்டு வயது சிறுமி

மலேசியாவின் திரங்காணு மாநிலத்தில் குளவிகளால் கொட்டப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட எட்டு வயது சிறுமி, இன்று காலை உயிரிழந்தார்.

சுல்தானா நுர் ஸகிரா மருத்தவமனையில் அந்தப் பெண் அதிகாலை 1.30 மணிக்கு உயிர் நீத்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

"இந்தச் சிறுமி குளவிகளால் 67 முறை குத்தப்பட்டார். குளவிகளின் கொடுக்குகளிலிருந்து அவரது உடலுக்குள் பரவிய நஞ்சால் அவரது உள்ளுறுப்புகள் செயலிழந்துள்ளன," என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே மருத்துவமனையில் நேற்று குளவிகளால் தாக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர்.