ஜோகூர் சுல்தான்: அதிகார சண்டை தொடர்ந்தால் சட்டமன்றம் கலைக்கப்படும்

ஜோகூர் பாரு: மாநி­லத்­தில் மீண்­டும் ஒரு அதி­கார சண்டை தொடர்ந்­தால் புதி­தாக தேர்­தல் நடத்­தும் பொருட்டு சட்­ட­மன்­றத்தை கலைக்­க­வி­ருப்­ப­தாக ஜோகூர் சுல்­தான் இப்­ரா­ஹிம் சுல்­தான் இஸ்­கந்­தர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

மாநி­லத்­தில் நடந்து வரும் அர­சி­யல் கொந்­த­ளிப்பு குறித்து தனது விரக்­தியை வெளிப்­ப­டுத்­திய அவர், சக்­தி­யற்ற தலை­வர்­கள் இருப்­ப­தா­க­வும், சுய­ந­லத்­திற்­காக தொடர்ந்து பத­வி­யேற்­கி­றார்­கள் என்­றும் கூறி­னார்.

“தற்­போ­தைய நெருக்­கடி நிலை­யில், மக்­க­ளைப் பற்றி அவர்கள் கவ­லைப்­ப­டு­வ­தில்லை. மக்­க­ளின் துன்­பங்­களை மேலும் அதி­க­ரிக்கத் தயா­ராக உள்­ள­னர்.

“என் மக்­கள் துன்­பப்­ப­டு­வதை என்­னால் பார்க்க முடி­யாது, என் மாநி­லத்­தைச் சீர்­கு­லைக்க நான் விட­மாட்­டேன்,” என்­றார்.

கடந்த பிப்­ர­வரி மாதம் பெரிக்­காத்­தான் நேச­னல் மாநில அர­சாங்­கத்தை அமைத்­தது.

தற்­போது மாநில அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு போது­மான சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவை பெற்­றுள்­ள­தாக ஜோகூர் பக்­கத்­தான் ஹரப்­பான் கூறி­ வ­ரு­கிறது.

ஜோகூ­ரில் பெரிக்­காத்­தான் நேச­ன­லுக்கு 29 இடங்­களும் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணிக்கு 27 தொகு­தி­களும் உள்­ளன.

பெரிக்­காத்­தான் நேஷனல் கட்சியி­லி­ருந்து யாரா­வது ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கட்சி தாவி­னால்­கூட தொங்கு சட்­ட­மன்­றம் உரு­வா­கும் நிலை ஏற்­பட்­டு­வி­டும் நிலை உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!