மலேசியாவில் கிருமித்தொற்று அதிகரிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய கொரோனா கிருமித் தொற்று சம்பவங்கள் திடீரென உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 277 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 270 பேர் குடிநுழைவு தடுப்பு நிலையங்களில் உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 8,247 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 115 பேர் கிருமிக்குப் பலியாகியுள்ளனர்.