முகைதீனுக்கு எதிராக மகாதீர் வழக்கு

கோலா­லம்­பூர்: கட்­சி­யின் உறுப்­பி­னர் நிலை­யி­லி­ருந்து தாங்­கள் நீக்­கப்­பட்­ட­தற்கு எதி­ராக முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீ­ரும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் வழக்குத் தொடுத்­துள்­ள­னர்.

பெர்­சத்து தலை­வர் முகை­தீன் யாசின் கட்­சி­யின் செயல் தலை­வர் அல்ல என்­றும் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ள­ராக ஹம்சா ஜைனு­டி­னின் நிய­ம­னம் செல்­லாது என்­றும், அவர்­கள் இரு­வ­ரின் கட்சி உறுப்­பி­னர் தகு­தியை நீதி­மன்­றம் ரத்து செய்ய வேண்­டும் என்­றும் அந்த வழக்­கின் மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தவ­றா­க­வும் உள்­நோக்­கம் மற்­றும் சதித்­திட்­டத்­தோடு அதன் தலை­வர்­களை நீக்கி பெர்­சத்­துவை அவர்­கள் கைப்­பற்­றி­யுள்­ள­தாக 61 பக்­கம் கொண்ட அந்த வழக்கு மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனவே தாமே இன்­ன­மும் பெர்­சத்து கட்­சி­யின் அவைத் தலை­வர் என நீதி­மன்­றம் அறி­விக்க வேண்­டும் என்று டாக்­டர் மகா­தீர் தமது வழக்கு மனு­வில் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

மேலும் மகா­தீ­ரு­டன் நீக்­கப்­பட்ட அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளான முக்­ரிஸ், சையத் சாடிக் அப்­துல் ரஹ்­மான், மஸ்லி மலேக், அமி­ரு­டின் ஹம்சா, ஆகி­யோ­ரும் கட்­சிப் பத­வி­க­ளி­லும் கட்சி உறுப்­பி­னர்­களாகவும் நீடிப்­ப­தா­க நீதி­மன்­றம் அறி­விக்க வேண்­டும் என்­றும் அதில் கோரப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!