மலேசியாவில் உள்நாட்டுப் பயணம் தொடக்கம்; ஜூன் 24ல் பள்ளி திறப்பு

மலே­சி­யா­வில் மீட்­சிக்­கான நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை என்­னும் புதிய அம்­சம் நேற்று நடப்­புக்கு வந்­தது. மாநி­லம் விட்டு மாநி­லம் மக்­கள் பய­ணம் செய்­வ­தற்­கான தடை அதன் மூலம் அகற்­றப்­பட்டுள்­ளது. கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­க­ளாக முடக்கிவைக்­கப்­பட்டு இருந்த வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் பல நேற்று மீண்­டன. கிரு­மிப் பர­வலை தடுக்­கும் நோக்­கில் மார்ச் 18ஆம் தேதி நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­களை அறி­மு­கம் செய்த மலே­சியா ஏற்­கெ­னவே மே 4 ஆம் தேதி சில தளர்­வு­களை அறி­வித்­தது. அத­னைத் தொடர்ந்து உற்­பத்தி நிறு­வ­னங்­களும் அத்­தி­யா­வ­சி­யச் சேவை­களும் அப்­போது மீண்­டும் பணி­க­ளைத் தொடங்­கின.

தளர்­வு­டன் கூடிய புதிய ஆணைக்கு இணங்க நேற்று சிகை அலங்­கா­ரக் கூடங்­கள், அழகு பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கின. தமது சங்­கத்­தில் உறுப்­பி­ன­ராக உள்ள சிகை அலங்­கா­ரக் கடை­களில் அடுத்த இரு வாரங்­க­ளுக்கு முழு­வ­து­மாக சேவைக்கு பதிவு செய்­யப்­பட்டிருப்பதாக மலே­சிய முடி­தி­ருத்­து­வோர் சங்­கத் தலை­வர் மைக்­கல் போ தெரி­வித்­தார்.

போக்­கு­வ­ரத்து நிலை­யங்­களில் மக்­கள் நேற்­றுக் காலை முதல் வரிசை பிடிக்­கத் தொடங்­கி­னர். குறிப்­பாக, தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் உள்ள பிடி­எஸ் ஒருங்­கி­ணைந்த போக்­கு­வ­ரத்து முனை­யத்­திற்கு வந்த பய­ணி­க­ளுக்கு உடல்­வெப்­பம் சோதிக்­கப்­பட்­டது. பாது­காப்பு இடை­வெளி நடை­

மு­றை­க­ளை­யும் அவர்­கள் பின்­பற்­றி­னர். நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை மேம்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­க­ளைத் தவிர இதர பகு­தி­களில் போக்­கு­வ­ரத்­து­கள் இயங்­கின. அதே நேரம் நாட்­டின் அனைத்­து­லக எல்­லை­கள் தொடர்ந்து மூடப்­பட்டு உள்­ளன.

இதற்­கி­டையே, இம்­மா­தம் 24ஆம் தேதி முதல் பள்­ளி­க­ளைக் கட்­டம் கட்­ட­மா­கத் திறக்க அர­சாங்­கம் ஆயத்­த­மாகி வரு­வ­தாக கல்வி அமைச்­சர் முகம்­மது ரட்ஸி முகம்­மது ஜிடின் தெரி­வித்து உள்­ளார். நாடு மீட்­சி­ய­டை­யும் பாதை­யில் அடி எடுத்து வைத்­தி­ருப்­ப­தால் மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு வர்த்­த­கங்­கள் செயல்­ப­டத் தொடங்கி உள்­ளன.

பொது தேர்­வு­க­ளை­யும் அனைத்­து­ல­கத் தேர்­வு­க­ளை­யும் எதிர்­நோக்­கும் மாண­வர்­கள் முதற்கட்­ட­மாக பள்­ளி­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். பள்­ளி­களை மீண்­டும் திறப்­ப­தன் மூலம் 2,440 பள்­ளி­க­ளைச் சேர்ந்த சுமார் 500,000 மாண­வர்­கள் வகுப்­பு­க­ளுக்­குத் திரும்­பு­வர்.

தேசிய பாது­காப்பு மன்­றம், சுகா­தார அமைச்சு ஆகி­ய­வற்­று­டன் கலந்து பேசிய பின்­னர் பள்­ளி­க­ளைத் திறப்­பது குறித்து முடிவு செய்­யப்­பட்­ட­தாக நேற்று தெைலைக்­காட்­சி­யில் பேசிய போது அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!