மலேசியர்களை அனுமதித்தால் சிங்கப்பூரர்களுக்கு கட்டுப்பாடு விலக்கப்படலாம்: மலேசியா

கொவிட்-19 பரிசோதனை, இல்லத் தனிமை ஆகிய கட்டுப்பாடுகள் இன்றி சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடும் என்றும் அதேபோல மலேசியர்களுக்கும் பரஸ்பர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருக்கும் என்றும் மலேசியா கூறியுள்ளது.

சிங்கப்பூர், புருணை ஆகிய நாடுகளின் குடிமக்கள் மலேசியாவுக்குள் கட்டுப்பாடுகளின்றி நுழைய அனுமதிக்கப்படும்போது அவ்விரு நாடுகளுக்குள் நுழையும் மலேசியர்களுக்கும் அதேபோன்ற நீக்குப்போக்கு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று (ஜூன் 19) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூரும் புருணையும் பச்சை மண்டலங்களாக மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதால் புதிய ஏற்பாடுகள் பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இருப்பினும் இந்த அம்சத்தில் சிங்கப்பூரின் நிலை என்னவென்பது மலேசிய, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தது என்றும் திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக வேறொரு செய்தியாளர் கூட்டத்தில் மலேசிய சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரி வித்தார்.


அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!