ஜோகூரில் 5 மாவட்டங்களில் வெள்ளம்; தற்காலிக இடங்களில் 1,210 பேர் பாதுகாப்பாக தஞ்சம்

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தின் ஐந்து மாவட்­டங்­களில் வெள்­ளம் ஏற்­பட்­ட­தால் 1,210 பேருக்­கும் அதிக மக்­கள் தற்­கா­லிக நிவா­ரண இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

பொந்­தி­யான், பத்து பகாட், மூவார், குலு­வாங், தங்­காக் ஆகிய மாவட்­டங்­கள் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக அந்த மாநி­லத்­தின் சுகா­தார சுற்­றுப்­புறக் குழுத் தலை­வர் ஆர். வித்­தி­யா­னந்­தன் தெரி­வித்­தார்.

ஐந்து மாவட்­டங்­களில் இடை­வி­டா­மல் மழை பெய்­த­தால் வெள்­ளம் ஏற்­பட்டு உள்­ளது என்­றும் 288 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மொத்­தம் 1,210 பேர் 18 இடங்­களில் பாது­காப்­பாக தங்க வைக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்­றும் அறிக்கை ஒன்­றில் அவர் கூறி­னார்.

இத­னி­டையே, வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் அனை­வருக்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த மூவா­ரில் மாநில அர­சாங்­கம் பரி­சோ­த­னை­களை நடத்தி இருக்­கிறது என்று ஜோகூர் மாதர் மேம்­பாடு, குடும்ப மற்­றும் சமூ­கக் குழுத் தலை­வர் ஸாய்­டோன் இஸ்­மா­யில் தெரி­வித்­தார்.

வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­களை அப்­பு­றப்­ப­டுத்­தும் போதும் அவர்­க­ளுக்­கான தற்­கா­லிக கூடங்­களை அமைத்தபோதும் கொவிட்-19 நிபந்­த­னை­கள் எல்­லாம் முறை­யாகப் பின்­பற்­றப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

சுகாதாரத்­ துறை ஊழி­யர்­கள் கொவிட்-19 பரி­சோ­த­னை­களை நடத்­தி­ய­தா­க­ சுங்கை பலாங் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான ஸாய்­டோன் இஸ்­மா­யில் கூறினார்.

சில இடங்­களில் வெள்­ளம் வடிந்துள்ள போதிலும் பாதிக்­கப்­பட்டு உள்­ள­வர்­கள் இன்­ன­மும் வீடு திரும்ப அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்று நேற்று அவர் குறிப்­பிட்­டார். நல்­வாழ்­வுத்­ துறை மூலம் மாநில அர­சு மக்­க­ளுக்கு உதவி வரு­வதா­க­வும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!