‘முட்டாள்கள் என்று நினைக்கவேண்டாம்’

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் ஒன்­ப­தா­வது பிர­த­ம­ராக ஷாஃபி அப்­தால் முன்­மொ­ழி­யப்­பட்­டது தொடர்­பில் பேசிய சர­வாக் துணை முதல்­வர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங், சாபா மக்­க­ளை­யும் சர­வாக் மக்­க­ளை­யும் முட்­டாள்­க­ளாக நினைக்க வேண்­டாம் என்று மகா­தீ­ரைச் சாடி­யுள்­ளார்.

இதன் மூலம் சாபா மற்­றும் சர­வாக் எம்­பிக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற முடி­யும் என்று முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­மது நினைப்­பது வெட்­கக்­கே­டா­னது என்று பிஆர்­எஸ் கட்­சி­யின் சர­வாக் தலை­வர் கூறி­னார்.

“ஷாஃபி ஒரு நல்ல மற்­றும் திற­மை­யான தலை­வர் என்­பதை நான் அறி­வேன். ஆனால் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு திட்டங்களை ஆதரிக்க இரண்டு கிழக்கு மலேசிய மாநிலங்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காக சாபா, சரவாக் மக்களை முட்டாளகளாக நினைக்க வேண்டாம்.

“அர­சி­யல் விளை­யாட்டு விளை­யா­டு­வதை நிறுத்­தி­விட்டு ஒரு­முறை உண்­மை­யாக இருக்­கு­மாறு டாக்­டர் மகா­தீரை நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்,” என்று திரு மாசிங் தி ஸ்டார் ஊட­கத்­திற்கு அனுப்­பிய குறுஞ்­செய்­தி­களில் கூறி­னார்.

சாபா மக்­க­ளுக்கு ஏற்­கெ­னவே அளித்த வாக்­கு­று­தியை மகா­தீர் நிறை­வேற்­ற­வில்லை என்­பதை

அவர்­கள் மறக்­க­மாட்­டார்­கள் என்­றும் அவர் சொன்­னார்.

1994ஆம் ஆண்­டில் மகா­தீர் அறி­மு­கப்­ப­டுத்­திய சுழற்சி முறை­யில் சாபா முத­ல­மைச்­சர் நிய­மிக்­கப்­ப­டு­வது குறித்த தனது வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தார், ஆனால், பக்­கத்­தான் ஹரப்­பன் கூட்­டணி 2018ல் வெற்றி பெற்ற பிறகு திரு ஷாஃபியை முத­ல­மைச்­ச­ராக நிய­மித்­த­தன் மூலம் அந்த வாக்­கு­று­தியை அவர் மீறி­விட்­டார் என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!