மலேசிய எதிர்க்கட்சிகளுக்கிடையே தொடரும் பூசல், கருத்து வேறுபாடு

கோலாலம்பூர்: மலேசிய எதிர்க்கட்சிகளுக்கிடையே கருத்து மோதல் தொடர்கிறது. தம்முடன் இருந்துகொண்டே தந்திரமாகச் செயல்பட்டு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் ஆட்சியை அரசியல்வாதிகள் சிலர் கவிழ்த்ததாக கெஅடிலான் கட்சித் தலைவர் திரு அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.

ஆனால் டாக்டர் மகாதீரின் பிரதமர் பதவி பறிபோனதற்கு காரணமான ஒருவருடன் திரு அன்வார் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பதை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த அமானா நெகாரா கட்சியும் ஜனநாயக செயல் கட்சியும் பதிலடி தந்துள்ளன.

ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படும் திரு ஹம்சா சைனுதீனுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்பதை அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.