உல்லாசப் பூங்காக்களை மீண்டும் திறக்கும் மலேசியா

பெட்டாலிங் ஜெயா: நாளையிலிருந்து உல்லாசப் பூங்காக்களை மீண்டும் திறப்பதற்கு மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்கிஉள்ளதாக அந்நாட்டின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று தெரிவித்தார்.

இதன்மூலம் நீச்சல் குளங்களும் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள 54 உல்லாசப் பூங்காக்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த கடைத்தொகுதிகளுக்கும் ஹோட்டல்களுக்கும் செல்பவர்களின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்

படுகிறது. இந்த விதிமுறை சற்று தளர்த்தப்படும் என்று அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்தார். இவ்விடங்களுக்குச் செல்வோரின் உடல்வெப்பநிலை ஒருமுறை மட்டும் பரிசோதிக்கப்படும்.