அம்னோவுக்காக பிரசாரம் செய்யும் பெர்சத்து கட்சி; சினி சட்டமன்ற இடைத்தேர்தல்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் ஒன்றில், முன்னாள் பரம எதிரியான அம்னோ கட்சிக்காக மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சி முதன்முறையாக பிரசாரம் செய்ய இருக்கிறது.

பாகாங் மாநிலம், சினி சட்டமன்றத்தில் அம்னோவின் பிடியைத் தக்கவைத்துக்கொள்ள அக்கட்சி வேட்பாளர் முகம்மது ஷரிம் முகம்மது ஸயின் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்தத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

திரு ஷரிமை எதிர்த்து இரு சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அவ்விரு வேட்பாளர்களில் ஒருவரான திரு ஸைனுல் ஹிஷாம் ஹுசேன், மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

சினி இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. மலேசியாவில் கொரோனா கிருமி பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்நாட்டில் நடத்தப்படவிருக்கும் முதல் தேர்தல் இதுவே.

பாகாங்கின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியின்கீழ் உள்ள நான்கு சட்டமன்ற இடங்களில் ஒன்று சினி. முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் பிடியில் சினி உள்ளது.

இந்நிலையில், நாட்டின் பிரதமராகவும் பெர்சத்து செயல் தலைவராகவும், சினி இடைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி கூட்டணி வேட்பாளரை தாம் முழுமையாக ஆதரிப்பதாக திரு முகைதீன் நேற்று முன்தினம் கூறினார்.

இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்க 20,900 பேர் தகுதி பெற்றுள்ளனர். சினி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அம்னோவின் அபுபக்கர் ஹரூன், 60, கடந்த மே 6ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!