மலேசியாவில் புதிய வெற்றி முழக்கம்

பெக்­கான்: மலே­சி­யா­வின் கிழக்கு மாநி­ல­மான பாகாங்­கின் சினி சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் தேசிய முன்­னணி வென்றுள் ளது. அதன் வேட்­பா­ளர் முகம்­மது ஷரிம், 41, மொத்­தம் 13,872 வாக்­கு­கள் பெற்­றார். இவரை எதிர்த்து அர­சி­யல் கட்­சி­கள் சார்­பில் வேட்­பா­ளர்­கள் நிறுத்­தப்­ப­ட­வில்லை.

இரு சுயேச்சை வேட்­பா­ளர்­கள் மட்­டுமே போட்­டி­யிட்­ட­னர். அவர்­களில் ஒரு­வ­ரான ஜைனுல் ஷிஷாம் என்­னும் வர்த்­த­கர் 1,222 வாக்­கு­க­ளை­யும் சமூ­க­நல ஆர்­வ­ல­ரான முகம்­மது சுக்ரி 137 வாக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர். முடி­வாக, 12,650 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் திரு ஷரிம் வென்­றார். 14வது பொதுத் தேர்­த­லில் இத்­தொ­கு­தி­யின் தேசிய முன்­னணி வேட்­பா­ள­ரான அபு பக்­கார் ஹாரு­னுக்­குக் கிடைத்த வாக்­கு­க­ளைக் காட்­டி­லும் இவர் 4,622 வாக்­கு­கள் கூடு­த­லா­கப் பெற்­றுள்­ளார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வல் காலத்­தில் மலே­சி­யா­வில் நடை­பெற்­றி­ருக்­கும் முதல் தேர்­தல் என்­ப­தோடு மார்ச் மாதம் முகை­தீன் யாசின் பிர­த­மர் பதவி ஏற்ற பின்­னர் நடை­பெற்ற முதல் தேர்­தல் இது. எனவே முகை­தீன் யாசி­னின் ஆட்சிக்கு மக்­கள் கொடுத்த சான்­றாக தேசிய முன்­ன­ணி­யும் அத­னு­டன் இணைந்­துள்ள பாஸ் கட்­சி­யும் கூறி­யுள்­ளன. திரு முகை­தீ­னின் பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­டணி இவ்­விரு கட்­சி­க­ளுக்­கும் அத­ரவு வழங்கி வரு­கிறது.

2018ஆம் ஆண்டு நடை­பெற்ற 14வது பொதுத்­தேர்­த­லுக்­குப் பின்­னர் நாடு முழு­வ­தும் நடை­பெற்ற ஆறு இடைத்­தேர்­தல்­களில் தேசிய முன்­னணி வென்­றுள்­ளது.

கேம­ரன் மலை, தஞ்­சோய் பியாய், கிம்மா­னிஸ் ஆகிய நாடா­ளு­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் செமினி, ரந்­தாவ் ஆகிய சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் அந்த முன்­ன­ணி­யின் வேட்­பா­ளர்­கள் வாகை­சூ­டி­ய­தைத் தொடர்ந்து சனிக்­கி­ழமை வெற்­றி­யும் சேர்ந்­துள்­ளது. இத­னைப் பட்­டி­ய­லிட்ட அம்னோ தலை­வர் அக­மது சாஹிட் ஹமிடி, மக்­க­ளின் விருப்­பத் தேர்­வாக இன்­னும் தேசிய முன்­ன­ணியே தொட­ரு­கிறது என்­றார். தேசிய முன்­ன­ணி­யின் சின்­னம் மக்­க­ளி­டம் எடு­ப­டாது என்ற வாதம் இந்த வெற்­றி­க­ளின் மூலம் தகர்க்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!