கோலாலம்பூரில் ஆற்றில் விழுந்த கார்

கோலாலம்பூரிலுள்ள சோகோ கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள ஆற்றில் கார் ஒன்று இன்று விழுந்தது.  காலை 8.30 மணி அளவில்  கார் ஓட்டுநர் தனது வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து அந்தக் கார் ஆற்றுக்குள் விழுந்ததாக த ஸ்டார பத்திரிகை தெரிவித்தது. ஓட்டுநரின் பெயரையோ வயதையோ எப்படி அவர் கட்டுப்பாட்டை இழந்தார் என்பதையோ அந்தப் பத்திரிகை குறிப்பிடவில்லை. ஆயினும், அவர் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கார் விழுந்த ஆற்றின் நீரோட்டம் பலமாக இருந்ததால் மீட்புப் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகியதாக அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது. அந்தக்  காரும் காலை 10.74 மணிக்குள் அகற்றப்பட்டதாக அது கூறியது.