மலேசியாவில் மின்னியல் வாக்களிப்பு முறை பரிசீலனை

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், அடுத்த பொதுத் தேர்தலில் மின்னியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

மின்னியல் வாக்களிப்புக்கான சாத்தியத்தை ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் அது உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் அலுவலக அமைச்சரான தக்கியுதின் ஹசன், “வாக்காளர்களின் கல்வித் தகுதி, பாதுகாப்பு, செலவு உள்ளிட்ட ரகசிய தரவுகளை மின்னியல் வாக்களிப்பு முறை உள்ளடக்கி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்னியல் வாக்களிப்பு முறை இன்னமும் திருப்திகரமான நிலையை எட்டவில்லை என்றார் அவர்.

இது குறித்த இறுதி முடிவை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி பதில் நேரத்தின்போது அமைச்சர் பேசினார்.

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் மின்னியல் வாக்களிப்பு முறை பற்றி அதிகம் பேசப்படுகிறது.

நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு 2023ஆம் ஆண்டு வரை கால அவகாசம் உள்ளது.

ஆனால் கொரோனா கிருமி பரவும் தற்போதைய சூழ்நிலையில் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் தற்போதைய அரசாங்கம் குறுகிய பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளதால் எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அம்னோ கட்சி உறுப்பினரான மஹ்ட்ஸிர் காலித், “மலேசியாவில் திடீர் தேர்தல் நடைபெற்றால் மின்னியல் வாக்களிப்பு முறைக்கு அரசாங்கம் தயாராக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய திரு தக்கியுதின், பிரேசில், எஸ்டோனியா, இந்தியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னியல் வாக்களிப்பு முறை இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

இருந்தாலும் தாளில் வாக்களிக்கும் பழைய முறைக்கு திரும்ப பல நாடுகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுவதை அவர் ஒப்புக்கொண்டார்.

“தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்ப ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில், மின்னியல் வாக்களிப்பு முறை வலுவானது என்பது இன்னமும் நிரூபணமாகவில்லை,” என்று திரு தக்கியுதின் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!