மகாதீர்: புதிய கட்சி தொடங்குவேன்

கோலாலம்பூர்: பெர்சத்துக் கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தமக்கு எதிராக தீர்ப்பு அமைந்தால் புதிய கட்சியைத் தொடங்குவேன் என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் அறிவித்து உள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை. இருந்தாலும் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்காற்றுவேன் என்றார் அவர்.

திரு மகாதீர் தவிர பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த இதர நான்கு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.

ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பெர்சத்துக் கட்சியின் தற்போதைய தலைவரும் பிரதமருமான முகைதீன் யாசின் மற்றும் மூன்று பேர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இம்மாதம் 14ஆம் தேதி பேசிய டாக்டர் மகாதீர் தாமும் தனது ஆதரவாளர்களும் திடீர் தேர்தல் நடைபெற்றால் புதிய கட்சியின் கீழ் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.

பக்கத்தான் ஹரப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை என்றும் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்தார்.

டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்தபோது பொருளியல் விவகார அமைச்சராக பணியாற்றிய கெஅடிலான் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது,

இதற்குப் பதிலளித்த டாக்டர் மகாதீர், அஸ்மின் அலியின் அரசியல் பார்வை குறுகியதாக இருக்கிறது என்றார்.

“கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமை எதிர்க்க வேண்டும் என்பதே அஸ்மின் அலியின் இலக்காக உள்ளது. ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக அதையே குறிக்கோளாக வைத்துக் கொள்ளக்கூடாது. நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும் அவர் சிந்திக்க வேண்டும்,” என்று மகாதீர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!