மலேசியாவில் கொவிட்-19 பரிசோதனை செய்ய தவறிய 2,897 பேர் மீது குற்றஞ்சாட்டப்படும்

மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் இரண்டாவது முறையாக கொவிட்-19 பரிசோதனையைச் செய்யத் தவறிய 2,897 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். அவர்கள் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை முதல் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார்.

“இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டாவது முறையாக கிருமித்தொற்றுப் பரிசோதனையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

வசிப்பிடத்தில் தனிமைப்படுத்திக்கொள்ளும் கட்டாய உத்தரவில் 9,600 பேர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு மக்கள் நடப்பதை உறுதி செய்ய போலிசாரும் சுகாதார அதிகாரிகளும் திடீர் சோதனை நடத்துவர்,” என்று திரு இஸ்மாயில் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து மலேசியா திரும்புவோர், தனிமைப்படுத்தும் மையங்களில் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளது. அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon