மலேசியா: முன்னாள் நிதியமைச்சர் மீது மற்றொரு குற்றச்சாட்டு

பினாங் ஆழ்கடல் சுரங்கத்திட்டத்தின் தொடர்பில் லஞ்சம் பெற்ற மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லிம் அம்மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது லிம் 3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த லிம் எதிர்நோக்கும் இரண்டாவது குற்றச்சாட்டாக இது உள்ளது. பினாங்கு மாநிலத்தில் இந்தக் குற்றச்சாட்டு பினாங்கிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 59 வயது லிம், அதே திட்டத்தின் வருங்கால லாபத்தின் அடிப்படையில் கையூட்டு பெற முயன்றதாக மலேசியாவின் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம் சாட்டியது.

தம்மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள லிம், ஒரு மில்லியன் ரிங்கிட் பிணையில் வெளிவந்துள்ளார். இது தமக்கு எதிரான அரசியல் சதி என அவர் கூறுகிறார். நாளை அவர், தற்போது குறிப்பிடப்படாத மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்க உள்ளார்.

ஐனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த லிம்மின் மனைவியான பாங் லீ கூன் கைது செய்யப்பட்டிருக்கிறார். வர்த்தகரான பாங் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

6.3 ஆம் பில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டத்தை 2017ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் கண்காணித்து வருவதாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சி கவிழ்ந்து பெரிக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் அமைத்ததைத் தொடர்ந்து லிம்முக்கு எதிரான விசாரணை துரிதமடைந்து வருகிறது.

இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் லிம் 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையை எதிர்நோக்கலாம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!