சுடச் சுடச் செய்திகள்

‘மலேசியாவில் தேர்தல் நடைபெற்றால் 1.2 பி. ரிங்கிட் செலவு’

கோலாலம்பூர்: தற்போதைய கொவிட்-19 சூழலில் திடீர் தேர்தல் நடைெபற்றால் அரசாங்கம் 1.2 பில்லியன் ரிங்கிட் வரை செல வழிக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் தக்கியூதீன் எச்சரித்துள்ளார். கிருமிப்பரவல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்

கொவிட்-19க்கு முன்பு 2018 மே 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கு 500 மில்லியன் ரிங்கிட் செலவழிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் நாடு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெற்றால் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அமல் படுத்த 1.2 பில்லியன் ரிங்கிட் வரை செலவாகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக அமைச்சர் தக்கியூதீன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் நடந்த ஐந்து இடைத்தேர்தலுக்கு மட்டும் மொத்தம் 12.95 மில்லியன் ரிங்கிட் செலவானதாக அவர் சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon