மலேசியாவில் உருமாற்றம் அடைந்த கிருமி பத்து மடங்கு வேகமுடையது

மலே­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று வீரி­ய­மிக்க புதிய வகை­யாக மாறி­யி­ருப்­பதை சில பரி­சோ­தனை மாதி­ரி­கள் உணர்த்­து­வ­தாக அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. முதன்­மு­த­லில் சீனா­வின் வூஹா­னில் உரு­வா­ன­தைக் காட்­டி­லும் அச்­சு­றுத்­தல் மிகுந்­த­தாக கிருமி உரு­வெ­டுத்­தி­ருப்­ப­தா­கத் தெரிய வந்­தள்­ள­தால் நாடு முழு­வ­தும் உள்ள மக்­கள் அதிக விழிப்­பு­டன் இருக்­கு­மாறு சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கேட்­டுக்­கொண்டுள்­ளார்.

சிவ­கங்கை, உலு திராம் ஆகிய இரு கிரு­மித்­தொற்று குழு­மங்­களில் சேக­ரிக்­கப்­பட்ட மாதி­ரி­களில் D614G என்­னும் புது வடி­வத்­துக்கு கிருமி மாற்­றம் அடைந்­தி­ருப்­பதை மலே­சிய மருத்­துவ ஆரா­ய்ச்சி நிலை­யம் கண்டு பிடித்து இருப்­ப­தாக நேற்று தமது ஃபேஸ்புக் மூலம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் டாக்­டர் ஹிஷாம் குறிப்­பிட்­டார்.

மாற்­றம் கண்­டுள்ள இந்­தக் கிருமி இப்­போது பர­வு­வ­தைக் காட்­டி­லும் பத்து மடங்கு வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது. மேலும் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வ­ரி­டம் இருந்து மிக எளி­தில் மற்­ற­வ­ருக்­குத் தொற்­றக்­கூ­டி­யது என்று அவர் விளக்கி உள்­ளார்.

இந்த அள­வுக்கு வீரி­ய­மிக்­க­தாக உரு­மாற்­றம் அடைந்­தி­ருக்­கும் கிரு­மி­யின் உறு­தி­யான நில­ வ­ரம் இனி­மேல் வெளி­யி­டப்­படும் என்­றும் தற்­போது அதன் மீதான ஆரம்­பக்­கட்ட பரி­சோ­தனை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

இந்த வகை கிருமி அது உரு­வான குழு­மங்­களில் இருந்து பர­வாத வண்­ணம் மலே­சிய பொது சுகா­தார அதி­கா­ரி­கள் விரைந்து செயல்­பட்டு கட்­டுப்­ப­டுத்தி இருப்­ப­தா­க­வும் திரு ஹிஷாம் குறிப்­பிட்­டார். இதைப்ே­பான்ற எல்லா வகைக் கிரு­மித்­தொற்­றும் பர­வா­த­படி தடுக்­கும் முயற்­சி­க­ளுக்கு மக்­க­ளின் ஒத்­து­ழைப்பு அவ­சி­யம் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

தமிழ்­நாட்­டின் சிவ­கங்­கை­யில் இருந்து மலே­சியா திரும்­பிய அந்­நாட்­டின் நிரந்­த­ர­வா­சி­யான 57 வயது ஆட­வ­ரி­ட­மி­ருந்து பல­ருக்­குக் கிருமி பர­வி­ய­தைக் குறிப்பதே சிவகங்கை கிருமிக் குழுமம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!